மின்சாரம் வழங்குவதற்கான எரிபொருளைத் தேடுவது இன்னும் நெருக்கடியில்!

Prathees
2 years ago
மின்சாரம் வழங்குவதற்கான எரிபொருளைத் தேடுவது இன்னும் நெருக்கடியில்!

இலங்கையின் தடையற்ற மின் உற்பத்தி தொடர்ந்தும் நெருக்கடியில் உள்ளது.

மின் உற்பத்திக்கான எரிபொருளை இனி வழங்க முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்திக்கான எரிபொருளை பெற வேண்டுமாயின் டொலரில் செலுத்த வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மின்சக்தி அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் சில நாட்களுக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்வது தொடர்பில் லங்கா ஐஓசியுடன் கலந்துரையாடவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடல் நாளை நடைபெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை வரை தடையில்லா மின்சார விநியோகத்திற்கான எரிபொருளை கண்டுபிடிக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மின்சார விநியோகத்தை பேணுவதற்கான எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக மின் உற்பத்திக்கான எரிபொருள் விநியோகம் செய்யப்படாததால் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாளை வரை இலங்கை மின்சார சபைக்கு 1500 மெற்றிக் தொன் டீசலை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.