இலங்கை பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவும் கொரோனா!

#SriLanka #School #Covid 19
Nila
2 years ago
இலங்கை பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவும் கொரோனா!

ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தினால் நிர்வகிக்கப்படும் கினி கத்தேன தேசிய பாடசாலையின் எட்டு மாணவர்களும் மூன்று ஆசி ரியர்களுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 குறித்த மாணவர்கள் கல்வி கற்கும் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகள் தற் காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பாடசாலை முழுவதும் தொற்று நீக்கப்படுவதாகப் பாடசாலை அதிபர் உபுல் இந்திரஜித் தெரிவித்தார்.
 
பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழுவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக இன்று 18 ஆம் திகதி சுமார் 150 சிறுவர்கள் பாடசாலைக்கு வந்ததாகவும் அதில் அறிகுறிகளுடன் கூடிய மாணவர்கள் வீட்டுக்கு திரும்பி அனுப்பப்பட்டதாகவும், பாடசாலையின் 63 ஆசிரியர்கள் மாத்திரமே இன்று  18 ஆம் திகதி பாடசாலைக்கு வருகை தந்ததாகவும் மற்றும் பாடசாலைக்கு வருகை தராத மாணவர்களுக்கு Zoom தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி நடவடிக்கைகளை மேற் கொள்ளவும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அதிபர் தெரிவித்தார்.
 
பாடசாலை சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது மற்றும் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு அருகில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சுமார் 500 மாணவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக அதிபர் தெரிவித்தார்.
 
கினிகத்தேன தேசிய பாடசாலையில் சுமார் 2100 மாணவர்களும் கிட்டத்தட்ட 100 ஆசிரியர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.