கட்டணம் செலுத்தாததால் நீர் இணைப்பு துண்டிப்பு: துவைக்க தண்ணீர் இல்லை எனக் கூறி அங்கிகளை எரித்த தேரர்

Prathees
2 years ago
கட்டணம் செலுத்தாததால் நீர் இணைப்பு துண்டிப்பு: துவைக்க தண்ணீர் இல்லை எனக் கூறி அங்கிகளை எரித்த தேரர்

தண்ணீர் கட்டணத்தில் ஒரு பகுதியை தான் செலுத்தியுள்ளதாகவும் முன்னறிவிப்பின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும்  ஜனசெத முன்னணியின் தலைவர் வண.பத்தரமுல்லை சீலரதன தேரர் தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர விகாரைக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஹம்பாந்தோட்டை பிராந்திய நீர் முகாமைத்துவ காரியாலயத்திற்கு முன்பாக தேரர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

தண்ணீர் இல்லாததால் தனது அங்கிகளை துவைக்க கூட முடியவில்லை எனக் கூறி பலகையின் முன் இருந்த பல அங்கிகளை தீ வைத்து எரித்துள்ளார் தேரர்.

இந்த சம்பவம் தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கை வருமாறு.

பத்தரமுல்லை சீலரதன தேரர், 111/A கவுந்திஸ்ஸபுர, திஸ்ஸமஹாராமவில் அமைந்துள்ள ஆலயத்திற்கு
தண்ணீர் கட்டணம் முறையாகச் செலுத்தாததால் டிசம்பர் 24, 2021க்குள் 71,991.17 ழூபாய்  மொத்தக்கண்டணம் செலுத்த வேண்டியிருந்தது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையின்படி இந்த நிலுவையிலுள்ள நீர் கட்டணங்களைத் தீர்ப்பதற்கு பல தடவைகள் தேரருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்களுக்கு குடிநீர் வழங்கும் சலுகைக் கட்டணத் திட்டத்தில் இந்தக் கோயிலுக்கு நீர் விநியோகம் செய்யப்படுகிறது.

5,000 ரூபாய்க்கு மேல் தண்ணீர் கட்டணம் பாக்கி இருந்தால் தண்ணீர் இணைப்பை துண்டிக்க நீர் வாரியத்திற்கு சட்டப்படி உரிமை உண்டு.

எனினும், இப்பகுதியில் வழிபாட்டுத் தலமாக உள்ளதால், தண்ணீர் இணைப்பை துண்டிக்காமல், இந்த பிரச்சினையைத்  தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறுஇ பல சந்தர்ப்பங்களில், அன்புடன் தெரிவிக்கப்பட்டது

10,000.00 ரூபா 2022 ஜனவரி 13 ஆம் திகதி செலுத்தப்பட்டுள்ளதாக கௌரவ பத்தரமுல்லை சீலரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அப்போது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. (2022.01.18 இல் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் தொகை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.)

எதிர்காலத்தில் நீர் கட்டணம் முறையாக செலுத்தப்படும் என அறிக்கை ஒன்றில் கையொப்பமிட வேண்டும் என்றாலும், பத்தரமுல்லை சீலரதன தேரரும் அந்த அறிக்கையில் கையொப்பமிட மறுத்துள்ளார்.

என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.