ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் ஆஜரான விசேட சாட்சி

#Court Order
Prathees
2 years ago
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் ஆஜரான விசேட  சாட்சி

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுவிக்கப்படுவாரா? இல்லையா குறித்த தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (19) தெரிவித்துள்ளது.

மனுதாரர்களின் அழைப்பாணை நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னதாக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன அனுப்பிய 31 கடிதங்களில் பெரும்பாலானவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் நேற்று தெரியவந்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக முன்னாள் சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த வழக்குஇ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்தி மற்றும் மொஹமட் இர்ஷாதீன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் சமர்ப்பித்த புலனாய்வு அறிக்கைகள் அடங்கிய 38 ஆவணங்களின் மூல ஆவணங்களை ஆஜர்படுத்துவதற்காக சாட்சியொருவர் நேற்று  அழைக்கப்பட்டார்.

பொலிஸ் மா அதிபரின் புலனாய்வு அறிக்கை பிரிவின் பிரதான பரிசோதகர் நிமல் சேனாரத்ன என்பவரே அந்த சாட்சி.

தன்னால் குறிக்கப்பட்ட ஆவணங்களுக்கு மத்தியில் ஆறு ஆவணங்களின் மூலப் பிரதிகள் காணாமல் போயுள்ளதாக வழக்கை விசாரித்துவரும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்தார்.

மேலும் ஆவணம் ஒன்றின் அசல் நகலை சாட்சி  கொண்டு வரவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், அசல் ஆவணங்களின் குறியிடல் சாட்சியால் தொடங்கப்பட்டது. சில ஆவணங்கள் முழுமையடையாமல் இருந்ததையும்இ வெவ்வேறு ஆவணங்கள் இருப்பதையும் நீதிமன்றம் கவனித்தது.

விசாரணை நடத்தப்படும் போது,​​முழுமையான அறிக்கையை நீதிமன்றத்திலும்இ சட்டமா அதிபர் திணைக்களத்திலும் சமர்பிக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் உறுப்பினர் ஆதித்ய படபெண்டிகே திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கில் வாதியால் குறிக்கப்பட்ட சில ஆவணங்களில் அசல் ஆவணங்கள் வேறு நிலையில் உள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

இவ்வாறான செயற்பாடுகள் குற்றப் புலனாய்வுச் செயற்பாட்டின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைப்பதாக நீதிபதி ஆதித்ய படபெந்திகே குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட பூஜித் ஜயசுந்தர சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரொஷான் தெஹிவல குறுக்கு விசாரணைகளை ஆரம்பித்தார்.

குறுக்கு விசாரணைக்கு பதிலளித்த சாட்சி, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன அனுப்பிய 31 கடிதங்களில், உரிய நடவடிக்கை எடுப்பதற்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறிப்புகளை எடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டார்.

புலனாய்வு அறிக்கைகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்இ வடமேல் மற்றும் சப்ரகமுவ பிரதேசங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் ஆகியோருக்கு ஜெயசுந்தர குறிப்புகளை அனுப்பியதாக சாட்சி ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த முறைப்பாட்டைக் குறிக்கும் புலனாய்வுப் பதிவுகள் அடங்கிய 31 ஆவணங்களில் 21 ஆவணங்களுக்கு எதிராகத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக நீதிமன்றில் மேலும் தெரியவந்துள்ளது.