பங்களாதேஷ் கடற்படைத் தளபதியுடன் ஷவேந்திர சில்வா சந்திப்பு

Prabha Praneetha
2 years ago
பங்களாதேஷ் கடற்படைத் தளபதியுடன் ஷவேந்திர சில்வா சந்திப்பு

நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று )பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்திருந்த பங்களாதேஷ் கடற்படைத் கடற்படைத் தளபதி அத்மிரல் எம். ஷஹீன் இக்பால், மரியாதை நிமித்தமாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

வருகைத் தந்த தளபதியின் வாகனம் அணிவகுப்பு நுழைவாயிலை அடைந்ததை தொடர்ந்து அவருக்கு இராணுவ கொடிகளுக்கு மத்தியில் சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டதோடு, சீராண உடையணிந்த சிப்பாய்களால் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைவாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து இராணுவ தலைமையக பட்டாலியன் கட்டளை அதிகாரி பிரிகேடியர் இந்திக்க பெரேரா வருகை தந்த தளபதிக்கு வரவேற்பளித்தார்.

அதனை அடுத்து, இராணுவ தளபதியின் செயலக வளாகத்திற்கு வருகை தந்த பங்களாதேஷ் கடற்படைத் தளபதிக்கு இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக வரவேற்பளிக்கப்பட்டதோடு, அவருக்கான மரியாதை அணிவகுப்பும நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது இலங்கை பீரங்கிப் படையணியின் வண்ணமயமான அணிவகுப்பு மரியாதை நிகழ்வு வருகை தந்த தளபதிக்கு சிறப்பு கௌரவத்தை அளிப்பதாக அமைந்திருந்தது.

அதனை அடுத்து கெப்டன் ஈடிகே எதிரிவீரவின் தலைமையின் கீழ் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதைக்கு மத்தியில் நிறைவேற்று பணிப்பாளர் நாயகத்தினால் மரியாதை ஏற்பதற்கான மேடைக்கு தளபதியவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்.

அதனையடுத்து இராணுவ தளபதியின் செயலக வளாகத்தில் பங்களாதேஷ் கடற்படைத் தளபதிக்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வரவேற்பளிக்கப்பட்டதோடு, இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த கடற்படைத் தளபதிக்கு தலைமையகத்தின் முதன்மை பதவி நிலை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளையும் அறிமுகப் படுத்தினார்.

புதிய இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்ததன் நினைவம்சமாக இராணுவ தலைமையகத்தின் அனைத்து முதன்மை பதவி நிலை அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றுது.

இராணுவ தளபதியின் அலுவலகத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பின் போது, பங்களாதேஷ் கடற்படைத் தளபதி அத்மிரல் எம் ஷாஹீன் இக்பால் மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான, ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர், தற்போதைய கடல்சார் பிரச்சினைகள், இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள், உலக அளவிலாள மாற்றங்கள், கடற்படையின் செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா, பங்களாதேஷ் கடற்படைத் தளபதியின் இலங்கை விஜயம் மற்றும் இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்தமைக்காக நன்றி தெரிவித்ததுடன், பிராந்தியத்தில் உள்ள அண்மைய நாடு என்ற வகையில் ஆயுத படைகளுக்கு வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அதனை அடுத்து இராணுவ தலைமையகத்திற்கான தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டிருந்த பங்களாதேஷ் கடற்படை தளபதி அத்மிரால் எம் ஷஹீன் இக்பாலுக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் விஷேட நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.