குறைவடையும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்

Prathees
2 years ago
குறைவடையும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் குறைவடைந்துள்ளதாக நீர்த்தேக்க பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 155 அடியாக இருந்ததுடன்இ 21ஆம் திகதி காலை 6 மணியளவில் 18 அடியாக குறைந்துள்ளது.

மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 157 அடியாக காணப்பட்டதுடன்இ 21ஆம் திகதி காலை வரை நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 34 அடியினால் குறைந்துள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் வறண்டு கிடப்பதால் நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணியின் போது நீரில் மூழ்கிய பல இடிபாடுகள் தற்போது மீள் எழுச்சி பெற்று வருகின்றன.

மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து 75 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கனியன் நீர் மின் நிலையத்திற்கு நீர் கொண்டு செல்லும் சுரங்கப்பாதையின் பராமரிப்பு பணிகள் காரணமாக மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் மின் உற்பத்தி தற்காலிகமாக ஒரு மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த மின் உற்பத்தி நிலையம் தவிர லக்சபான, புதிய லக்சபான மற்றும் பொல்பிட்டிய நீர் மின் நிலையங்களுக்கு நீரைப் பெற்றுக் கொள்வதற்காக கனியன் நீர்த்தேக்கத்தின் வான்கதவு சுமார் ஒரு மாத காலமாக இரவு பகலாக திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன்  பராமரிப்பு பணிகள் முடிக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என மின் வாரிய பொறியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.