புலமைப்பரிசில் பரீட்சையின் போது ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Prathees
2 years ago
புலமைப்பரிசில் பரீட்சையின் போது ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

நேற்று (22) இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் குறிப்பிட்ட பாடசாலைகளில் உள்ள குழந்தைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எந்தவொரு மாணவருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

சில சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. அவற்றை நாங்கள் விசரித்து வருகின்றோம். 

காலி நாகொட ரோயல் கல்லூரி,வெலிமடை விஜயா ஆரம்பக் கல்லூரி, யு. பி.வன்னிநாயக்க கல்லூரி ஆகிய  3 பரீட்சை மையங்களில் இருந்து இந்த குற்றச்சாட்டு வந்துள்ளன.

வினாத்தாள் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை என்பது முக்கிய குற்றச்சாட்டு.

நேரம் குறைவாக இருந்திருந்தால், நேரம் நீட்டிக்கப்பட்டிருக்காது.

“சேதம் இருந்தால் நியாயம் கிடைக்கும்.மூன்று விசாரணை நடத்தப்படும். விடைத்தாள்கள் கிடைத்துள்ளன.

இன்று காலை அந்த சேகரிப்பு மையத்திற்குச் சென்று இந்த வினாத்தாள்களை வேறாக எடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.