RT-PCR சோதனையிலும் கண்டுபிடிக்க முடியாத புதுவகை கொரோனா வைரஸ்.. எச்சரிக்கும் நிபுணர்கள்!

Keerthi
2 years ago
RT-PCR சோதனையிலும் கண்டுபிடிக்க முடியாத புதுவகை கொரோனா வைரஸ்.. எச்சரிக்கும் நிபுணர்கள்!

RT-PCR சோதனையில் இருந்தும் தப்பிக்கக்கூடிய புதிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸில் இருந்து வந்த வைரஸ் வகைதான் ஒமிக்ரான். தற்போது இந்த ஒமிக்ரான் வகை வைரஸின் துணை வைரஸாக பி.ஏ.2 வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதை 'ஸ்டெல்த் ஓமிக்ரான்' என்று அழைக்கின்றனர்.

4 வயது சிறுவனை கொலை செய்து.. பீரோவில் அடைத்து வைத்த கொடூர பெண்.. அப்படியே அரண்டு போன மக்கள்!
நாற்பது நாடுகளுக்கு மேல் இந்த வகை ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளதாக லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த "ஸ்டெல்த் ஓமிக்ரான்" தற்போது ஐரோப்பா முழுவதும் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் குறித்து விளக்கியுள்ளது. அதன்படி, ஓமிக்ரான் வைரஸின் மாறுபாடு மூன்று துணை வைரஸைக் கொண்டுள்ளது - BA.1, BA.2 மற்றும் BA.3. இந்நிலையில், உலகம் முழுவதும் பதிவாகியுள்ள ஓமிக்ரான் நோய்த்தொற்றுகளில் BA.1 துணை வைரஸ் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதுபோல‌ BA.2 துணை வைரஸ் விரைவாக பரவி வருகின்றது.

உதாரணமாக, டென்மார்க் நாட்டில், கண்டறியப்பட்ட வைரஸ்களில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் இந்த ஒமிக்ரானின் BA.2 துணை வைரஸ் பரவி இருக்கிறது. லண்டன் சுகாதார அதிகாரிகள் BA.2 ஐ ஒமிக்ரானின் மாறுபாடு என்றும் அறிவிக்கப்படும் என்கின்றனர். 'ஸ்டெல்த் ஓமிக்ரான்' பாதிப்புகளை, இங்கிலாந்து மற்றும் டென்மார்க் தவிர, ஸ்வீடன், நார்வேயில் கண்டறியப்பட்டிருக்கின்றன.

மேலும், அதிர்ச்சியளிக்கும்விதமாக‌ இந்தியாவிலும் பிஏ.2 துணை வைரஸின் மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் பிரான்சில் உள்ள விஞ்ஞானிகள் இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் குறித்து எச்சரித்துள்ளனர். இது BA.1 துணை விகாரத்தை விட அதிகமான விளைவுகளை விளைவிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

BA.1 துணை வைரஸ் RT- PCR சோதனைகளில் கண்டறிய முடிகிறது. ஆனால், BA.2 துணை வைரஸ் இருப்பதை இந்த சோதனைகளில் கண்டறியமுடியவில்லை. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. BA.1 துணை வைரஸ் சில சமயங்களில் RT-PCR சோதனைகளில் இருந்து தப்பிக்கக்கூடும் என்றாலும், இந்த சோதனைகள் வைரஸைக் கண்டறிவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. தற்போது இருக்கும் கருவிகளைக் கொண்டு சில மாற்றங்களை செய்து கண்டறிந்து வருகின்றனர்.