சுவிட்சர்லாந்து செல்பவர்களுக்கு. மகிழ்ச்சியான செய்தி.!!!

Keerthi
2 years ago
சுவிட்சர்லாந்து செல்பவர்களுக்கு. மகிழ்ச்சியான செய்தி.!!!

ஸ்விட்சர்லாந்து அரசு பயணிகள் புறப்படும் முன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வீதியை நீக்குவதாக அறிவித்துள்ளது.

ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் தற்போது நுழைவு விதிமுறைகளை குறைத்து சர்வதேச பயணம் மேற்கொள்வதை எளிதாக்கக் கூடிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. அதன்படி பயணத்திற்கு முன்பே மேற்கொள்ளவேண்டிய பரிசோதனை தேவையை நீக்கியிருக்கிறது. எனினும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் அல்லது 270 நாட்களுக்குள் கொரோனாவிலிருந்து மீண்டதற்கான ஆதாரம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தளர்வு நேற்று முன்தினத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல விரும்பும் பயணிகள், தடுப்பூசி செலுத்தவில்லை என்பதால் பயப்படத் தேவையில்லை. அவர்கள் புறப்படுவதற்கு 72 மணி நேரங்களுக்கு முன்பு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

மேலும் நாட்டிற்கு வந்த பின் நான்காம் மற்றும் ஏழாம் நாட்களில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் சுவிசர்லாந்து ரத்து செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.