“எனக்கு வேறு பெண் மீதும் காதல் வந்துடுச்சு” மனைவியிடம் உண்மையை உளறிய தனுஷ்!!
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவது என்பது அவ்வளவு எளிதான விசையமல்ல என்னதான் இளம் நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் கூட முதல் திரைப்பம் வெற்றி அடைந்து இருந்தாலும் கூட அவர்கள் நிலைத்து நிற்க வேண்டுமென்றால் மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே முடியும்..
இப்படி தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக இருந்தாலும் கூட மக்களுக்கு பிடித்து இருந்தால் மட்டுமே அடுத்துத்த பட வாய்ப்புகள் கிடைக்கும்.
இப்படி தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளில் சிக்கி தற்போது முன்னணி நடிகராக பல மொழிகளிலும் வளர்ந்து வருகிறார்.
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள்.
இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யாவின் பழைய பேட்டிகள் பற்றி தற்போது பேசப்படுகிறது. முன்பு ஒரு முறை பேட்டியில் தனுஷ் கூறியதாவது, எனக்கு 16 வயது இருந்தபோது ஒரு பெண்ணை பிடித்தது. அது தான் என் முதல் காதல். அவர் வேறு ஒரு பள்ளியில் படித்து வந்தார்.
நான் அவரை பின்தொடர்ந்தேன். ஒரு பெண்ணுக்காக ஒரு பையன் என்னவெல்லாம் செய்வானோ அதை எல்லாம் செய்தேன். அவர் என் காதலை ஏற்றார். பின்னர் ஓராண்டு கழித்து என்னை கழற்றிவிட்டார்.
எனக்கு அது காதல் தான். அவர் என்னை பிரிந்த பிறகு ஒரு வேளை இது கிரஷ்ஷாக இருக்குமோ என்று நான் ஆண்டுக் கணக்கில் நினைத்தேன். ஆனால் மூன்று ஆண்டுகள் கழித்தே அது காதல் என்பதை உணர்ந்தேன்.
என் முதல் காதல் பற்றி மனைவி ஐஸ்வர்யாவுக்கு தெரியும். நாங்கள் காதலிக்கும்போதே முதல் காதல் பற்றி ஐஸ்வர்யாவிடம் கூறிவிட்டேன்.
என் வாழ்வின் அந்த ஓராண்டு எப்பொழுதுமே பொன்னான காலமாக இருக்கும் என்று மனைவியிடம் தெரிவித்தேன். நேர்மையாக இருப்பது நல்லது என்றார்.