எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பது தொடர்பிலான அறிவித்தல்

Mayoorikka
2 years ago
எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பது தொடர்பிலான அறிவித்தல்

குறைந்தளவில் பயன்படுத்திய அல்லது சந்தேகத்திற்கிடமான எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பதற்கான இயலுமை உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பது தொடர்பில் பொதுமக்களை தௌிவூட்டுவதற்கான அறிவித்தலை நாளைய தினம் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக வௌியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மூன்று மொழிகளிலும் தேசிய பத்திரிகைகளூடாக இன்று அறிவித்தல்கள் பிரசுரமாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி மனோஹர ஜயசிங்க குறிப்பிட்டார்.

குறைந்தளவில் பயன்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகத்திற்கிடமான எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்குமாறு நீதிமன்றத்தால் இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய, நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் எரிவாயு நிறுவனங்கள் செயற்படவில்லை என தெரிவித்து நாகானந்த கொடித்துவக்கினால் முறைப்பாடு முன்வைக்கப்பட்ட போதே அரச சிரேஷ்ட சட்டத்தரணி இதனை கூறினார்.