ஓமன் நாட்டில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான வீடுகள்,அடக்கம் செய்யும் இடங்கள் கண்டுபிடிப்பு.!

Keerthi
2 years ago
ஓமன் நாட்டில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான வீடுகள்,அடக்கம் செய்யும் இடங்கள் கண்டுபிடிப்பு.!

ஓமன் அரசின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓமன் நாடு மிகவும் பாரம்பரியமானது ஆகும். இங்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஓமன் நாட்டின் ருஸ்தாக் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி பணியில் தற்போது இது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓமன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ருஸ்தாக் பகுதியில் சுல்தான் காபூஸ் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சித்துறை இத்தாலி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வீடுகள் மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பழங்கால வெண்கல காலத்தை சேர்ந்ததாக இருக்கும் என தெரிகிறது. மிகவும் பழமையான இப்பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பழங்கால மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் பயன்படுத்திய ஆடை, ஆபரணங்கள் மற்றும் பாரம்பரியம் போன்ற பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஆய்வுப் பணிகளும் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.