24வது தடவையாக ஆறு ஐரோப்பிய நாடுகளூடாக ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்

Keerthi
2 years ago
 24வது தடவையாக ஆறு ஐரோப்பிய நாடுகளூடாக ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்

மனித உரிமைகள் ஆணையகத்தின் 49 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு,  சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான உறுதியான தீர்வு என்பதனை வலியுறுத்தியும் மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் 24வது தடவையாக ஐ.நா நோக்கி ஆறு ஐரோப்பிய நாடுகளூடாக பயணிக்க இருக்கின்றது.                                  

• 16/02/2022 அன்று, பிரித்தானியப் பிரதமர் இல்லத்தின் முன் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து,  

•18.02.2022 அன்று, நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தைச் சென்றடைந்து, அங்கு 13:30 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறும்.    

•21.02.2022 அன்று பெல்சியத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலைச் சென்று 13: 30 கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்படும்.              

•26.02.2022 யேர்மனி Landau நகரில் நடைபெறவுள்ள மனிதச் சங்கிலி கவனயீர்ப்பு போராட்டத்தில் 14.30 மணிக்கு இணைந்து கொள்ளும்.   

•01.03.2022 பிரான்சின் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் , ஐரோப்பிய ஆலோசனை அவை முன்றலில் காலை 9:30 மணிக்கு நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளும்.       

•07.03.2022 சுவிசில் ஐக்கிய நாடுகள் அவைமுன்றலில், ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தைச் சென்றடையும்.            

உங்கள் வரலாற்றுக் கடமையினை ஆற்ற வாரீர்!!

 “ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துக் கட்ட முன்வர வேண்டும்”  
-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.   

-தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தகவல் ஐரோப்பிய தமிழர் ஒன்றியம் லங்கா4விட்க்கு தெரிவித்தது