ஷீலா மீன் வறுவல் வறுக்கும் முறை.

#Cooking #Fish #Fry
ஷீலா மீன் வறுவல் வறுக்கும் முறை.

தேவையான‌ பொருட்கள் :

  • ஷீலா மீன் - 10 துண்டுகள் 
  • மிளகாய்த் தூள் - 3-5 தேக்கரண்டி 
  • இஞ்சி பூண்டு கலவை - 2 தேக்கரண்டி 
  • மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 
  • தயிர் - 2 தேக்கரண்டி 
  • எண்ணெய் - 3 தேக்கரண்டி 
  • எலுமிச்சை - பாதி 
  • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

  1. மீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். நீரில் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள‌வும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு ஆகிய வற்றைச் சேர்த்து கலைவை செய்து கொள்ளவும். 
  2. இந்த கலவையில் மீன் துண்டுகளை நன்கு கலந்து, ஒரு மணி நேரத்திற்கு ஊற‌ வையுங்கள். இப்போது தவாவில் எண்ணெய் ஊற்றி மீனை (இருபுறமும்) நன்கு பொரித்து எடுக்கவும். 
  3. ஸ்டவ்வை சிம்மில் வைத்து நன்கு வேகும் வரை பொரிக்கவும். ஷீலா மீன் வறுவல் ரெடி. சாதம் அல்லது உங்கள் விருப்பத்தின் படி சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் சமையல் குறிப்புகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.