52 வருஷம் கழிச்சு டெலிவரியான தபால்..

Keerthi
2 years ago
52 வருஷம் கழிச்சு டெலிவரியான தபால்..

தற்போதைய நவீன உலகில் தபால்கள் அரிதாகிப் போன நிலையில் லிதுவேனியா நாட்டில் 52 வருடங்களுக்கு முன் தபால் செய்த கடிதங்கள் தற்போது உரிய நபரிடம் சேர்க்கப்பட்டிருக்கிறது.

போலந்து நாட்டிலிருந்து 12 வயது சிறுமி, தன் தோழிக்கு அனுப்பிய கடிதம், அவர் 60 வயதை தாண்டிய நிலையில் தற்போது உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதி, கடந்த 1970-ம் வருடம் மார்ச் மாதம். அதாவது ஈவா என்ற 12 வயது சிறுமி தன் தோழிக்கு, கிராமத்தில் பேருந்து வசதி இல்லாததால், கடும் குளிரில் பல மைல்கள் தொலைவு நடந்து வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்த கடிதம், சுமார் 52 வருடங்கள் கழித்து, அவரின் தோழியிடம் சேர்ந்திருக்கிறது. இந்நிலையில், அந்த பெண்மணி, இவ்வளவு வருடங்கள் கழித்த பின் அந்த கடிதம் கிடைத்ததை தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறியிருக்கிறார். அதாவது, சரியான முகவரியை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் அந்நாட்டில் பல வருடங்களாக பல கடிதங்கள் அப்படியே போடப்பட்டிருக்கிறது. அந்த கடிதங்களை தற்போது டெலிவரி செய்து வருகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!