50 ஆண்டுகள் கழித்து கிடைத்துள்ள கடிதங்கள் - நடந்தது என்ன...?

Nila
2 years ago
50 ஆண்டுகள் கழித்து கிடைத்துள்ள கடிதங்கள் - நடந்தது என்ன...?

லித்துவேனியாவில் உள்ள சிலர், 50 ஆண்டுகளுக்கு முன் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களை இப்போது தான் பெற்றுள்ளனர்.

அவை சில திருடர்களால், ஒரு பழைய அஞ்சல் நிலையத்தில் ஒழித்து வைக்கப்பட்டிருந்தன. கட்டடத்தைப் புதுப்பிக்க அண்மையில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது கடிதங்கள் கையில் சிக்கின.

62 வயதைக் கடந்த பெண் ஒருவர், 12ஆவது வயதில் பெற வேண்டிய கடிதத்தைப் பெற்றுள்ளார். போலந்தில் உள்ள ஒரு பெண் எழுதிய கடிதம் அது.

1970 மார்ச் மாதத்தில் அந்தக் கடிதத்தில் ஈவா என்ற சிறுமி தனது தோழியின் கிராமத்துக்கு பஸ் வசதி இல்லை என்றும் கடும் குளிரில் பல மைல் நடந்து வர வேண்டியிருப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இத்தனை ஆண்டுகள் கழித்து தமக்கு இக்கடிதம் கிடைத்தபோது அதை நம்பவில்லை என்கிறார் குளோனவஸ்கா என்ற அந்தப் பெண்மணி.

அத்தகைய 17 கடிதங்கள் உரியவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் ஐவர் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர்.