10,000க்கும் மேற்பட்ட இளம் பிள்ளைகளுக்கு முதல் தடுப்பூசி வழங்க சிங்கபூர் முடிவு.

Keerthi
2 years ago
10,000க்கும் மேற்பட்ட இளம் பிள்ளைகளுக்கு முதல் தடுப்பூசி வழங்க சிங்கபூர் முடிவு.

ஐந்­தி­லி­ருந்து ஆறு வய­துக்கு உட்­பட்ட கிட்­டத்­தட்ட 10,000 சிறு­வர்­க­ளுக்கு முதல் கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. தடுப்­பூ­சித் திட்­டம் சிறு­வர்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்­ட­தும் இந்த வய­துப் பிரி­வில் உள்ள பிள்­ளை­களில் 16,000க்கும் அதி­க­மா­னோர், அதற்கு விருப்­பம் தெரி­வித்­துள்­ள­னர். சுமார் ஒரு மாதத்­திற்கு முன்பு தடுப்­பூ­சித் திட்­டம் ஐந்­தி­லி­ருந்து 11 வய­துக்கு உட்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்­டது.

‘அவர் தெம்­ப­னிஸ் ஹப்’ மையத்­தில் சிறு­வர்­க­ளுக்­கான தடுப்­பூசி நிலை­யத்­திற்­குச் சென்­றி­ருந்த சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­ச­ரும் சுகா­தார இரண்­டாம் அமைச்­சரு­மான இந்த விவரங்­க­ளைத் தெரி­வித்­தார். சமு­தாய, குடும்ப மேம்­பாடு, கல்வி ஆகி­ய­வற்­றுக்­கான துணை அமைச்­சர் சுன் சூலிங்­கும் இந்­தத் தடுப்­பூசி நிலை­யத்­திற்­குச் சென்­றார்.

ஐந்­தி­லி­ருந்து 11 வய­துக்கு உட்­பட்ட சிறுவர்­கள் தங்­க­ளின் பெற்­றோர் அல்­லது தங்­க­ளைக் கவ­னித்­துக்­கொள்­ளும் பெரி­ய­வர்­க­ளு­டன் முன்­ப­திவு செய்­து­கொள்­ளா­மல் முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம். இந்த ஏற்­பாடு வாரந்­தோ­றும் திங்­கள் முதல் வியா­ழன் வரை பொருந்­தும்.

“மருத்­துவ ரீதி­யாக தங்­கள் பிள்­ளை­களுக்­குத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தகுதி இருந்­தால் அதற்­குப் பதி­வு­செய்­யு­மாறு நாங்­கள் பெற்­றோ­ரைப் பெரி­தும் ஊக்­கு­விக்­கிறோம். சிறு­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடு­வதன் மூலம் கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால் மோச­மாக நோய்­வாய்ப்­ப­டு­வ­தி­லி­ருந்து சமூ­கத்­தில் பல­ரைப் பாது­காக்­கலாம், மேலும், சமூக அள­வில் கிருமி பர­வும் அபா­யத்­தைக் குறைக்­க­லாம்,” என்று திரு மச­கோஸ் கூறி­னார்.