இங்கிலாந்தில் மார்க்கெட்டிங் வேலைக்கு வித்தியாசமான முறையில் விண்ணப்பம் செய்து வேலை பெற்ற வாலிபர்

Keerthi
2 years ago
இங்கிலாந்தில் மார்க்கெட்டிங் வேலைக்கு வித்தியாசமான முறையில் விண்ணப்பம் செய்து வேலை பெற்ற வாலிபர்

இங்கிலாந்தின் யார்க்சையரில் உள்ள பிரபல நிறுவனம் இன்ஸ்டன்ட்பிரின்ட். இந்த நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்திருந்தது. 140-க்கும் மேற்பட்ட விண்ணப்பம் வந்த நிலையில், ஹெச்.ஆர். பிரிவு தகுதியான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

அப்போது, நாம் விண்ணப்பம் செய்ய இருப்பதோ மார்க்கெட்டிங் வேலைக்கு, அதனால் ஆக்கப்பூர்வமான வழியில் விண்ணப்பித்தால் என்ன? என 24 வயதான ஜோநாதன் ஸ்விஃப்ட் எண்ணினார்.

இதனால் அந்த நிறுவனத்திற்கு கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்தியிருந்த ஒவ்வொரு காரிலும் தனது விண்ணப்பத்தை பறக்கவிட்டார்.

இதை அலுவலகத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிக்கு வியப்பாக இருந்தது. காவலாளியிடம் அந்த வாலிபர் என்ன செய்கிறார் என்று கேட்க, அவர் மூலம் விண்ணப்பத்தை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துகிறார் என்பதை தெரிந்து கொண்டார்.

இப்படிப்பட்ட கிரியேட்டிவ் மூளை கொண்ட நபர்தான் வேலைக்கு தேவை என அதிகாரி, அந்த வாலிபருக்கு வேலை வழங்கினார். தனது புத்தி கூர்மையினால் ஒட்டுமொத்த அலுவலக ஊழியர்களையும் பார்க்க வைத்து ஜோநாதன் வேலை வாங்கியது குறித்துதான் அந்த நிறுவனத்தில் பேச்சாக இருந்தது குறிப்பிடத்தக்கது.