கறுப்பு பணத்தில் ஆயுத கொள்வனவு : போர் காலத்தில் இடம்பெற்ற விடயங்களை சொல்வது கடினம்! பசில் ராஜபக்ஸ

Mayoorikka
2 years ago
கறுப்பு பணத்தில் ஆயுத கொள்வனவு : போர் காலத்தில் இடம்பெற்ற விடயங்களை சொல்வது கடினம்! பசில் ராஜபக்ஸ

இலங்கையின் இறுதிக் கட்ட போரின் போது கறுப்பு பணத்தைக் கொண்டு வடகொரியாவிடம் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக அண்மையில்  பத்திரிகையொன்றுக்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ  வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கறுப்பு சந்தையின் ஊடாக போரின் இறுதி கட்டத்தில் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கெளர்வனவு செய்த்தாக நீங்கள் அண்மையில் பத்திரிகையொன்றுக்கு கூறியிருந்தீர்கள்? உண்மையில் என்ன நடந்தது? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சர்ச்சைக்குரிய விடயங்களை நாம் எழுப்பாதிருப்பதே நல்லது. ஏனெனில் போர் காலத்தில் இடம்பெற்ற விடயங்களை சொல்வது கடினம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்கள் எதனையும் கொள்வனவு செய்யவில்லை எனவும் நிதி அமைச்சர் அவ்வாறான கருத்தை வெளியிடவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், நிதி அமைச்சர் பசில் மீண்டும் இந்த விடயம் குறித்து பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.