இந்திய கிரிக்கெட் அணியில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தவான் மற்றும் கெய்க்வாட் உள்ளடக்கம்
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 6-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. டி20 தொடர் பிப்ரவரி 16-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
இந்நிலையில், அகமதாபாத் வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இந்திய அணி வீரர்கள் தவான் , கெய்க்வாட், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், நெட் பவுலர் நவ்தீப் சைனி, பீல்டிங் கோச் திலீப், பாதுகாப்பு அதிகாரி லோகேஷ் உள்பட மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர். அதன்பின் 2 முறை கொரோனா நெகட்டிவ் என முடிவு கிடைத்த பிறகே மீண்டும் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்பதால் ஒருநாள் போட்டிகளில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.