2021-ம் ஆண்டுக்கான குளோபல் எக்சலன்ஸ் விருது பெரும் ‘அல் ஹொசன்’ செயலி

#Covid 19
Prasu
2 years ago
 2021-ம் ஆண்டுக்கான குளோபல் எக்சலன்ஸ் விருது பெரும் ‘அல் ஹொசன்’ செயலி

அமீரகத்தில் பொதுமக்கள் தாங்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட விவரங்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரங்கள் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள உதவும் வகையில் 'அல் ஹொசன்' செயலி இருந்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு விலக்கு உள்ளிட்ட காரணங்கள் ஒருவருக்கு இருந்தால் அது குறித்த விவரங்களையும் இந்த செயலியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த செயலியை அரபி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் பயன்படுத்தும் வசதி உள்ளது. இந்த செயலி அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அமைச்சகம், ‘அல் ஹொசன்’ தேசிய சுகாதார அமைப்பு உள்ளிட்டவற்றின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செயலியாக இருக்கிறது.

இந்த செயலி சுகாதார சேவையை டிஜிட்டல் முறையில் தெரிந்து கொள்ள உதவியாக இருப்பதுடன், கொரோனா பரவலை தடுப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறையில் அல் ஹொசன் செயலியின் சிறப்பான பங்களிப்பிற்காக 2021-ம் ஆண்டுக்கான அமெரிக்காவின் குளோபல் எக்சலன்ஸ் விருது ‘அல் ஹொசன்’ செயலிக்கு வழங்கப்பட்டுள்ளது.