கத்திரிக்காய் ரைஸ் சமைத்துப்பாருங்கள். மிகவும் உருசியுடன் கூடிய ஆரோக்கியமானது.

#Cooking #rice #meal
கத்திரிக்காய் ரைஸ்  சமைத்துப்பாருங்கள். மிகவும் உருசியுடன் கூடிய ஆரோக்கியமானது.

தேவையானவை:

  • அரிசி - கால் கிலோ,
  • பிஞ்சுக் கத்திரிக்காய் - 6,
  • வெங்காயம் - ஒன்று,
  • கடுகு - கால் டீஸ்பூன்,
  • கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
  • பச்சை மிளகாய் - ஒன்று,
  • மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
  • இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

  1. குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு இரு பங்கு தண்ணீர் விட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. பிறகு, நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து, வதக்கியதும் இஞ்சி -பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டுக் கலந்து வதக்கவும்.
  3. கத்திரிக்காய் வெந்து மணம் வந்ததும் இறக்கவும். இந்தக் கலவையில் சூடான சாதத்தைச் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பரிமாறலாம்.