பூகம்பத்தை விட மோசமாக அதிரும் பிரித்தானியாவின் ஆட்சி. கப்பல் கவிழுமா? நடுக்கடலைத் தாண்டுமா?

Keerthi
2 years ago
பூகம்பத்தை விட மோசமாக அதிரும் பிரித்தானியாவின் ஆட்சி. கப்பல் கவிழுமா? நடுக்கடலைத் தாண்டுமா?

பிரித்தானியாவில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் அதிகாரபூர்வ பணியகத்தில் அடுத்தடுத்து அதிரடியான பதவி விலகல்கள் இடம்பெற்றுவருவதால் ஒரு உலுக்கம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா முடக்க காலத்தில் பொறிஸ் ஜோன்சனின் அதிகாரபூர்வ பணியகத்தில நடத்தபட்ட சட்டவிரோத விருந்துகள் குறித்த விசாரணை அறிக்கை வெளி வந்திருந்த நிலையில் இந்த பதவி விலகல்கள் வந்துள்ளன.

பொறிஸ் ஜோன்சனின் நிர்வாகம் மொத்தமாக உருகிச்செல்வதை ஆதாரப்படுத்து வகையில் தலைமைச் செயலாளர், தகவல் தொடர்புத்தலைவர், பிரதமரின் தனிப்பட்ட பணியக அதிகாரி மற்றும் அவரது கொள்கைத் தலைவர் ஆகியோர் அடுத்தடுத்து 24 மணிநேரத்தில் தமது பதவி விலகல் அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

முதலில் பொறிஸ் ஜோன்சனின் மூளை என வர்ணிக்கப்படும் கொள்கை வகுப்பு தலைவர் முனிரா மிர்சா Munira Mirza பதவிவிலகிய சிறிது நேரத்தில், தகவல் தொடர்பு இயக்குனர் ஜக் டொய்ல Jack Doyle பதவி விலகலை அறிவித்தார்.

அதேபோலவே Dan Rosenfield டான் ரோசன்பீல்ட் மற்றும் மூத்த குடிசார் அதிகாரி மார்ட்டின் ரெனால்ட்ஸ் ஆகியோரும் பதவி விலகியுள்ளனர்.

கென்சர்வேடிவ் கட்சிக்குள் அமைதியின்மை அதிகரித்து வருவதால் இந்தப் பதவி விலகல்கள் இடம்பெற்று வருகின்றன.

உட்கட்சி ரீதியில் பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க இதுவரை 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.

ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கென்சர்வேடிவ் கட்சிக்குள் கொண்டுவருவதற்கு 54 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதங்கள் தேவையென்பது குறிப்பிடத்தக்கது.

எப்படியாயினும் கோவிட் 19 இன் ஆட்டம் சற்று உலக நாடுகளிடையே குறைந்து வழமைக்கு மாறிக்கொண்டிருப்பதால் பிரித்தானியா தப்பிக்கொள்ளும் என எதிர்பாற்க்கப்படுகிறது.