அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 05.02.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 05.02.2022

மேஷம்: 
அசுவினி: பலரின் கேலிகள் மாறி அவரிடம் இருந்தே பாராட்டு கிடைக்கும்.
பரணி: மதியத்துக்கு பிறகு நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்விக்கும்.
கார்த்திகை 1: நன்மைகள் அதிகம் நடைபெறும் நாள். குடும்பம் மகிழும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: எதிர்காலத் தேவைக்கான ஏற்பாடுகளை இன்று செய்வீர்கள்.
ரோகிணி: பகைமை காட்டியவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
மிருகசீரிடம் 1,2: பணவரவும், உங்களது செல்வாக்கும் மேலோங்கி மகிழ்சி தரும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: குழந்தைகளின் அறிவாற்றல் இன்று பளிச்சிடும்.
திருவாதிரை: பணியிடத்தில் நீங்கள் சாதனை புரிய சந்தர்ப்பம் கூடி வரும்.
புனர்பூசம் 1,2,3: நல்ல விஷயம் ஒன்று நீங்கள் நினைத்தபடியே முடியும்.

கடகம்: 
புனர்பூசம் 4: சகோதரர்களின் உதவி கிடைக்கும். மன உறுதி வரும்.
பூசம்: கவலை ஏற்படுத்திய விஷயம் ஒன்று இன்று நல்லபடியாக முடியும்.
ஆயில்யம்: இன்று எதிலும் அலட்சியமின்றி செயல்படுவது நல்லது.

சிம்மம்: 
மகம்: இன்று எது செய்தாலும் கவனமாக இருப்பது நல்லது.
பூரம்: சிறந்த வாய்ப்பு வரும் என்பதால் உங்களை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.
உத்திரம் 1: நீங்கள் வாழ்வில் முன்னேற புதிய சந்தர்ப்பம் கைகூடி வரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: குடும்பத்தினருடன் இன்றைய நாளை செலவிட்டு மகிழ்வீர்கள்.
அஸ்தம்: இன்று எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. கவலை தீரும்.
சித்திரை 1,2: புதிய முயற்சிகளைத் தொடங்கி எளிதாக முடிப்பீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: ஆன்மிக நாட்டம் கூடும். புதிய விஷயம் கற்பீர்கள்.
சுவாதி: உங்கள் துறையில் சாதனை புரிய புதிய வாய்ப்பு வரும்.
விசாகம் 1,2,3: மன அமைதி கூடுதலாகும். உடல் நலம் மேம்படும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: சில தடுமாற்றம் இருந்தாலும் கவலையற்ற நாள்.
அனுஷம்: தனித்தன்மையுடன் செயல்பட்டு உறவினரை மகிழ்விப்பீர்கள்.
கேட்டை: இன்று சில விஷயங்களை அவசரமாக முடிக்க வேண்டியிருக்கும்.

தனுசு: 
மூலம்: பணியிடத்தில் இன்று சிறு சலசலப்பு வந்து நீங்கும்.
பூராடம்: உங்களது கடமைகளை மறக்காமல் செய்யுங்கள். விருந்தில் பங்கேற்பீர்கள்.
உத்திராடம் 1: எந்தவொரு செயலையும் தள்ளிப்போடாமல் செய்வது நல்லது.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் செயல்படுவர். கவலை வேண்டாம்.
திருவோணம்: உறவினரின் உதவியால் பொருளாதார நெருக்கடி குறையும்.
அவிட்டம் 1,2: சிலர் மிகுந்த முயற்சி காரணமாய்ப் பதவி உயர்வு பெறுவர்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: தங்கப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிலும் நிதானப்போக்கு இருக்கும்.
சதயம்: தேவையற்ற பயம் வேண்டாம். உணவு விஷயத்தில் கவனம் தேவை.
பூரட்டாதி 1,2,3: பணியில் கவனம் தேவை. குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

மீனம்: 
பூரட்டாதி 4: முயற்சியை அதிகரித்து இன்று வெற்றியை சுவைப்பீர்கள்.
உத்திரட்டாதி: குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். பணியாளருக்கு பொறுப்பு கூடும்.
ரேவதி: கூடுதல் உழைப்பு இன்று பலன் அளிக்கும். மகிழ்ச்சி கூடும்.