இலங்கையில் பூரண தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களில் நடமாட தடை! வெளியானது அதிவிசேட வர்த்தமானி

#SriLanka #Keheliya Rambukwella #Covid Vaccine
Nila
2 years ago
இலங்கையில் பூரண தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களில் நடமாட தடை! வெளியானது அதிவிசேட வர்த்தமானி

முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்ளத் தவறிய நபர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிப்பதைத் தடை செய்யும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் கையொப்பத்துடன் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய பொது இடங்களுக்குப் பிரவேசிக்கும் நபர்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டமைக்கான ஆதாரத்தை தம்வசம் வைத்திருப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.