உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

Mayoorikka
2 years ago
உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

2021 ஆண்டு கல்விப் பொதுத்தார உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தார உயர்தர பரீட்சைகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன்,
பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இம்முறை 3 இலட்சத்து 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார்.

மேலும் சுகாதார அமைச்சுடன் இணைந்து கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட பரீட்சாத்திகளுக்கென விசேட பரீட்சை மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் 29 விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொவிட் தொற்றுக்கு உள்ளான பரீட்சாத்திகள் தமது சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவித்து , இந்த விசேட பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை எழுத முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் காணப்படுமாயின் பரீட்சை திணைக்களத்தின் 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 011-2784208 / 011-2784537 என்ற இலக்கங்களுக்கு அழைத்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.