டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள காட்டில் தீ விபத்து: பல ஏக்கர் எரிந்து நாசம்

Prathees
2 years ago
டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள காட்டில் தீ விபத்து: பல ஏக்கர் எரிந்து நாசம்

ஹட்டன் திம்புல பத்தனை பிரதேசத்தில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கருகில்பாதுகாப்புக்காட்டில் கடந்த 4ஆம் திகதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு மேற்கே திம்புல பதனவத்தை பிரதேச எல்லையில் கடந்த 4ஆம் திகதி இரவு 7 மணியளவில் தீ பரவியுள்ளது.

டெவோன் நீர்வீழ்ச்சி நீர்த்தேக்கப் பகுதியில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக தீ வேகமாகப் பரவியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக டெவோன் எல காப்புக்காட்டில் சுமார் 100 ஏக்கர் நிலத்தை ஒரு குழுவினர் தீயிட்டு கொளுத்தியதால் பாரிய சுற்றாடல் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், டெவோன் எலாவின் அழகுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மத்திய மலைநாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக சிலர் வேட்டையாடுவதற்கும் பொழுதுபோக்கிற்காகவும் தீ மூட்டி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.