ஆசிரியர்கள் அறிந்திருக்கவேண்டிய சில ஆவணங்களும் பதிவேடுகளும்..பாகம்- 1

Prathees
2 years ago
ஆசிரியர்கள் அறிந்திருக்கவேண்டிய சில ஆவணங்களும் பதிவேடுகளும்..பாகம்- 1

1)  வரவுப் பதிவேடு 
 கடமைக்கு சமூகமளித்தல், சமூகம் தராமை, லீவுகள் கணக்கிடல் போன்றவற்றுக்கு இந்த பதிவுப் புத்தகமே மூல ஆவணமாகப் பயன்படுத்தப்படுகின்றது.  ஒருவர் எதாவது தினம் ஒன்றில் கடமைக்குச் சமூகமளித்தார் என்பதனை உறுதிப்படுத்துவதற்கு அவர் சமூகமளிக்கின்ற நேரத்தைக் குறிப்பிட்டு கையொப்பமிடுவது கட்டாயமானதாகும். வரவுப் பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிடப்படாத தினங்கள் லீவு தினங்களாகப் பதியப்படும். 

2) லொக் பதிவேடு  
 யாராவது ஒருவர் ஆசிரியர் நியமனம் பெற்றுக்கொண்டு சேவையில் இணைகின்ற முதலாவது தினத்தில் அவரது நியமனம் பெற்றுக்கொண்டவிபரத்தினை அதிபர் லொக் புத்தகத்தில் பதிவார். ,அத்துடன்  குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் இடமாற்றம் பெறல், விபத்துக்குள்ளாகுதல், பிரசவ விடுமுறை போன்ற விசேட விடுமுறைகள் பெற்றுச் செல்லல், விசேட விடுமுறை முடிந்து மீண்டும் வந்து சேவையினைப் பொறுப்பேற்றல் போன்ற விசேடமான விடயங்கள் இந்தப் புத்தகத்தில் பதியப்படுவதுண்டு.  

 மேற்படி லொக் பதிவுக்குறிப்புகள் ஆசரியர்களின் நியமனம் நிரந்தரமாக்கும் போதும் ஆசிரியர்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு அவசியப்படலாம். 

3) லீவு பதிவேடு
சேவைக்கு வருகை தராமலிருக்கின்ற தினங்களுக்காக முறையான லீவு விண்ணப்பத்தினைப் பயண்படுத்தி அதிபரிடம் லீவுக்கான அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

 டெலிமெய்ல், ஈ மெய்ல், குறுந்தகவல் என்பவற்றின் ஊடாக லீவு பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பின் லீவு முடிந்து பாடசாலைக்கு வந்ததன் பின்னர் பெற்றுக்கொண்ட லீவுக்காக உரிய விண்ணப்பத்தினைச் சமர்ப்பித்து அதிபரின் அனுமதிக் கையெழுத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். .

 லீவு தொடர்பாக வௌியிடப்பட்டிருக்கின்ற சுற்றுநிருபங்கள் மற்றும் ஆலோசனைகள் என்பன குறித்து அறிந்து வைத்திருப்பது கட்டாயமானதாகும்.

தொடரும்