என் இதயத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி இலட்சியத்திற்கு தடையாக இருக்க கூடாது, நாட்டுக்காக களம் இறங்குவேன்:உதைபந்தாட்ட வீரன்

Keerthi
2 years ago
என் இதயத்தில் பொருத்தப்பட்டிருக்கும்  கருவி இலட்சியத்திற்கு தடையாக இருக்க கூடாது, நாட்டுக்காக களம் இறங்குவேன்:உதைபந்தாட்ட வீரன்

என் இதயத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி ( CARDIOVETER  DEFIBRILLATOR)என் இலட்சியத்திற்கு தடையாக இருக்ககூடாது, நான் அடுத்த உலக உதைபந்தாட்ட கிண்ணத்தில் என் நாட்டுக்காக களம் இறங்குவேன்.

சென்ற வருடம் 2021 ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் விளையாடி கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி மைதானத்தில் சுருண்டு விழுந்து உடனடியாக அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டவர் டென்மார்க் நாட்டின் தேசிய விளையாட்டு வீரன் CHRISTIAN  ERICSSON .அவருக்கு இதய துடிப்பை சரியாகவும் ஒழுங்காகவும் இயக்க கூடிய  ICD எனும் கருவி பொருத்தப்பட்டது அவர் தொழில் ரீதியாக விளையாடிக்கொண்டிருந்த  இத்தாலி நாட்டின் உதைபந்தாட்ட குழு அவரை தொடர்ந்து விளையாடுவது மருத்துவ ரீதியாக ஏற்புடையதல்ல என கூறி விட்டது. ஆச்சரியமான விதத்தில் இப்போது  7மாதங்கள் ஓய்வின் பின்னர், இங்கிலாந்தின் ஓர் உதைபந்தாட்ட விளையாட்டு குழுவில் இணைந்துள்ள செய்தி, ஒருபுறம் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் மறுபுறம் சற்று அக்கறையையும் கொடுத்துள்ளது .

29 வயது என் இளமை பருவம், இக்கால பருவத்தில் என் இலட்சியத்தை ஓரங் கட்ட மாட்டேன்,நடப்பது நடக்கட்டும் நான் மைதானத்தில் களமாடிக் கொண்டே
இருப்பேன், என் இலட்சியம் ,  கட்டாரில் இடம்பெறும் உலக உதைபந்தாட்ட கிண்ணத்தில் பங்கு கொண்டு என் நாட்டுக்காக வெற்றியை தேடிக் கொடுப்பது என்கிறார் தன்னம்பிக்கையுடன் ERICSSON. கடுமையான பயிற்சி , வெற்றிக்காக மைதானத்தில் மோதல்  இவற்றுக்கு அன்பின் அடையாளமான இதயம் 
என்ன பரிசு கொடுக்க போகிறது என்பது அவரின் உறுதியை பொறுத்தது .