வைத்தியர் பிரியந்தினிக்கு வந்த மிரட்டல்களை பட்டியலிட்டு வெளிப்படுத்தினார். அப்பாடா பெண்ணென்றால் இவ்வளவு கேவலமா?.

Keerthi
2 years ago
வைத்தியர் பிரியந்தினிக்கு வந்த மிரட்டல்களை  பட்டியலிட்டு வெளிப்படுத்தினார். அப்பாடா பெண்ணென்றால் இவ்வளவு கேவலமா?.

 கிளிநொச்சியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்களுக்கு கண் பாதிப்பு என கூறிய கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர் பிரியந்தினி விவகாரம் சில தினங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இதேவேளை, பாடசாலை மாணவர்களை குறிவைத்த மாபியாக்களின் தகவலை வெளியில் தெரிவித்த வைத்தியர் பிரியந்தினிக்கு மிரட்டப்பட்ட சம்பவமும் இடம்பெற்றிருந்தது. அதுகுறித்து வைத்தியர் பிரியந்தினி முகநூலில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அவர் பட்டியலிட்டவைகளை அப்படியே இங்கே தருகின்றோம்.

1.வன்புணர்வு மிரட்டல் – பிறாங் கோல்
2.கொலை மிரட்டல் – தெளிவான அடையாளத்தோடு RDHS அனுப்பியதாக தொலைபேசியினூடு(பொலீஸ் விசாரணையில்)
3. அப்பனை சீவுவம் வாள் வெட்டு காங் -நேரடியாக RDHS அனுப்பியதாக மீண்டும் மிரட்டல் (பொலீஸ் விசாரணையில்)
4.வளர்ப்பு நாயை லபி- காணவில்லை/கடத்தல் (பொலீஸ் விசாரணையில்)
5.செய்யும் வேலையில் இடம்மாற்ற டிரான்சர் அழைப்பு (நிராகரித்துவிட்டேன்)
6.கண்ட நிண்டவனின் ஓடியோக்களை நானே பிரபலமாவதற்கு லீக்பண்ணினேன் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டு
7.நான் வேலை செய்த அலுவலகத்திலேயே லீவெடுத்த இரு நாட்களில் பல மாற்றங்கள்
8..இன்டர்நெட்டில் இல்லாத பொல்லாத கேவலமான கற்பனையிலும் நினைத்துப்பார்க்க இயலாத கதைகள்
அடேய் பன்னிதான் படையோடு வரும்
சிங்கம் சிங்கிளாத்தன் வரும்
வெட்கமே இல்லையாடா ஒரு தனித்து நிக்கும் பெண்ணுடன் இவ்வளவு கூட்டமாக கேவலமாக மோத!!!
இலட்சங்ளில்தான் கொள்ளையிட்டீர்கள் என்று நினைத்திருந்தேன் உங்கள் அலப்பறைகள்ளப்பார்க்கையில் கோடியில் சுருட்டியுள்ளீர்கள் என்று புரிகிறது!!!
மருத்துவமாணவியாக வருடக்கணக்காக உளவியலைப்படித்து… மருத்துவராக உளவியலைப்புரிந்து சேவை செய்யும் மருந்துவிச்சி நான். உங்கள் உளவியலை முன்னே கணித்து எல்லா ஏற்பாட்ட்டுடன்தான் களமிறங்கியிருக்கன்
மீண்டும் சொல்கிறேன்…
மருத்துவ நிர்வாகம் எனது PASSION!!!
அதுக்கடுத்ததுதான் PROFESSION !!!
9. நிச்சயம் வெளியே கிளினக்கில் பேசன்ட் பார்க்கச்செல்கையில் என்னைக்கொல்வீர்கள்
அன்றும் இதே சிரித்த முகத்துடன்
வாழ்க்கையை முழுதுமாக அனுபவித்த திருப்தியுடன் அரசியல் கலப்படமற்ற வைத்தியராக இறப்பேன்
என வைத்தியர் வைத்தியர் பிரியந்தினி முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மேலும் முகநூலில் வைத்தியர் பிரியந்தினிக்கு சமூக ஆர்வலர் மற்றும் மக்கள் பலர் கமெண்ட்களில் ஆதர்வு தெரிவித்து வருகின்றனர்.