அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 06.02.2022

#Todayrasipalan #Dailyrasipalan #Rasipalan
Reha
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 06.02.2022

மேஷம்: 
அசுவினி: பயணம் செல்லும்போது பொருட்கள் பற்றிய கவனம் தேவை.
பரணி: சமூகத்தில் பெருமிதம் அடையும் படியான செயல் ஒன்றை செய்வீர்கள்.
கார்த்திகை 1: பெரியோரிடம் பணிந்து நடந்து அவர்களது ஆசியை பெறுவீர்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: வீட்டில் குதுாகலமான சூழல் நிலவும். சிறு பயணம் உண்டு.
ரோகிணி: பணியாளர்கள் கூடுதலாக உழைத்து நற்பெயர் பெறுவார்கள்.
மிருகசீரிடம் 1,2: அரசாங்கத்தின் மூலம் எதிர்பார்த்த நன்மை உண்டு.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: பொறுப்புகள் கூடும். நல்ல செய்தி வரும். பயம் தீரும்.
திருவாதிரை: நண்பர்கள் இடையே ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் அகலும்.
புனர்பூசம் 1,2,3: உங்களுக்கு ஆதரவு அளிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும்

கடகம்: 
புனர்பூசம் 4: புதிய வழிமுறைகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள்.
பூசம்: புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ஆயில்யம்: பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். அரசின் உதவி கிடைக்கும்.

சிம்மம்: 
மகம்: பேச்சில் கவனமாக இருந்தால் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம்.
பூரம்: பழி தரக்கூடிய செயல்களைச் செய்ய வேண்டாம். மனவலு கூடும்.
உத்திரம் 1: புதிய முதலீடுகளை ஆராய்ந்து செய்து வெற்றி அடைவீர்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: பணி சம்பந்தமாக வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும்.
அஸ்தம்: பொருளாதாரம் முன்பை விட சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சி கூடும்.
சித்திரை 1,2: பணியிடத்தில் உங்களது திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: பணியாளர்களுக்கு இன்று மகிழ்ச்சிகரமான செய்தி வரும்.
சுவாதி: குடும்பத்தில் ஒருவருக்கு தடைப்பட்டு வந்த நன்மைகள் இன்று நடைபெறும்.
விசாகம் 1,2,3: உங்களின் உடல்நலம் கடந்த நாட்களை விடவும் மேம்படும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: பொறுப்பினை நன்கு நிறைவேற்றி பாராட்டு பெறுவீர்கள்.
அனுஷம்: கடந்த சில நாளாக இருந்து வந்த பிரச்னை ஒன்று தீரும்.
கேட்டை: ஆழ்ந்து யோசித்து திட்டமிட்ட பிறகு புதிய செயலில் இறங்குங்கள்.

தனுசு: 
மூலம்: உங்களின் சமீபத்திய தவறால் ஏற்பட்டிருந்த தொல்லை நீங்கும்.
பூராடம்: மன உளைச்சல் நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும்.
உத்திராடம் 1: சிறு பயணத்தால் கடந்த கால பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
திருவோணம்: எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
அவிட்டம் 1,2: நீண்ட கால பிரச்னை ஒன்று தீரும். பேச்சினால் நன்மை வரும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: மற்றவர்களுக்கு நன்மை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
சதயம்: குடும்பச் சூழலில் சுமுகமான போக்கு இருக்கும். குழந்தைகளால் பெருமை வரும்.
பூரட்டாதி 1,2,3: அக்கம்பக்கத்தினர் பகையை மறந்து கலகலப்பாகப் பழகுவார்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: பணியாளர்களில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதமாகும்.
உத்திரட்டாதி: இன்று ஏற்படும் செலவுகள் நன்மையும், மகிழ்ச்சியும் தரும்.
ரேவதி: புதிய விஷயம் ஒன்றைக் கற்பீர்கள். கலகலப்பான நாள்.