இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக திடீரென அதிகரித்த உணவுப்பொருள் ஒன்றின் விலை!

Reha
2 years ago
இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக திடீரென அதிகரித்த உணவுப்பொருள் ஒன்றின் விலை!

இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் யோகட் ஒன்றின் விலை 55-60 ரூபா வரை அதிகரிக்க நேரிடும் என இலங்கை பால் சங்கத்தின் உப தலைவர் மஞ்சுள நிஷாந்த தெரிவித்துள்ளார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக 2020ஆம் ஆண்டு 30 ரூபாவாக இருந்த யோகட்டின் விலை தற்போது 50 ரூபாவாக அதிகரித்துள்ள போதிலும் உற்பத்தியாளருக்கு இலாபம் இல்லை என மஞ்சுள நிஷாந்த தெரிவித்துள்ளார்.

பால் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் யோகட் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  இதற்கு  அரசாங்கம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.