இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம், எரிபொருள் விலையை அதிகரிக்குமா?

#SriLanka
Nila
2 years ago
இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம், எரிபொருள் விலையை அதிகரிக்குமா?

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம், எரிபொருள் விலையை அதிகரிக்காது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

லங்கா IOC நிறுவனம், எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதை அடுத்து, எரிபொருள் நுகர்வோர் எதிர்வரும் நாட்களில் பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருகை தருகின்றமையினால், எரிசக்தி அமைச்சுக்கு மேலும் நட்டத்தை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

லங்கா IOC நிறுவனம் நேற்று (06) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி,  ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாவாலும், ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.

177 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் புதிய விலை 184 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 121 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் டீசலின் புதிய விலையாக 124 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.