கருப்புப் பணத்தைப் பயன்படுத்தி ஆயுதம் வாங்கியதாகக் கூறிய நிதியமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் - எதிர்க்கட்சி கோரிக்கை

Reha
2 years ago
கருப்புப் பணத்தைப் பயன்படுத்தி ஆயுதம் வாங்கியதாகக் கூறிய நிதியமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் - எதிர்க்கட்சி கோரிக்கை

கருப்புப் பணத்தைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை இலங்கை வாங்கியதாகக் கூறிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் இப்போது என்ன செய்கிறது? கருப்புப் பணத்தை எடுக்க வேண்டும் என்கிறார். அது யாருடைய கருப்புப் பணத்தை சொல்கிறார்? என்றும் அவர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

கருப்பு பணத்தை கட்டுப்படுத்த இந்த நாட்டில் சட்டம் இல்லை. சர்வதேச தடைகள் இல்லாமல் வர்த்தகம் செய்ய இந்த நாட்டு மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. சர்வதேச அளவில் சர்வதேச சமவாயங்களுக்கு உடன்பட்டிருக்குறோம்.

நாங்கள் இதற்கு எதிர்க்கிறோம். ஆனால் இவர்கள் வடகொரியாவில் இருந்து கருப்பு பணத்தை கையாள்கின்றனர். ஆபிரிக்க நாடுகளில் கருப்புப் பணம் இருப்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் யாருடைது என்பது தெரியாது, அது யாருக்கும் சொந்தமானது அல்ல, இந்த கருப்புப் பணம் இந்த நாட்டிலிருந்து திருடப்பட்ட பணம் என்று கூறப்படுகிறது.

இன்று நாடு இப்படி வங்குரோத்து நிலையில் உள்ளது. ராஜபசக்கள் இந்த நாட்டை கட்டுப்பாட்டில் வைக்கவில்லை. ஒரு நாட்டை ஆளவே ஒரு அரசாங்கம் நியமிக்கப்படுகிறது. இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியாது மற்றும் பொருட்களின் இறக்குமதி மீது கட்டுப்பாடுகள் இல்லை.

எமது மாகாண சபைகள் கலைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகின்றன. தயவு செய்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.அதற்கு நாம் எப்பொழுது தயாராக இருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.