உலகளவில் இதுவரை 39.58 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

Keerthi
2 years ago
உலகளவில் இதுவரை 39.58 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்றானது உலக நாடுகளை இன்றுவரை மிரட்டி வருகிறது. இந்த வைரசானது தொடர்ந்து உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வருகிறது. இந்த பெருந்தொற்றால், உலக நாடுகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பமுடியாமல் தவிக்கிறது.

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 39.58 கோடியாக உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை  57.58 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றிலிருந்து 31.47 கோடி பேர் குணமடந்துள்ளனர். 

அமெரிக்காவில் ஒரே நாளில் 50,561 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 369 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.  

ஒரே நாளில் பிரான்சில் 1.54 லட்சம், ஜெர்மனியில் 1.14 லட்சம், ரஷ்யாவில் 1.80 லட்சம், பிரேசிலில் 1.54 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.