இலங்கையில் காலாவதியான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டனவா?

#SriLanka #Corona Virus #Covid Vaccine
Nila
2 years ago
இலங்கையில்  காலாவதியான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டனவா?

பொதுமக்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காலாவதியான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என கொவிட் ஒழிப்பு இராஜாங்க அமைச்சின் இணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதற்காக நாட்டில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகவில்லை என்பதனை தொழில்நுட்ப ரீதியில் பொறுப்புடன் கூற முடியும் என்றார்.

காலாவதியான அல்லது காலாவதியாக அண்மித்த கொவிட் தடுப்பூசிகள் எவையும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. நாட்டில் 39 வீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு செல்ல குறைந்தபட்சம் 70 வீதமானவர்களுக்கு பூரணமாக தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.