சொந்த அக்கா மகளை மணந்த நடிகர் திலகம்! சிவாஜிகணேசன் திருமணமான கதை.

Reha
2 years ago
சொந்த அக்கா மகளை மணந்த நடிகர் திலகம்! சிவாஜிகணேசன் திருமணமான கதை.

பராசக்தியில் நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகர் திலகம் சிவாஜிக்குத் திருமணம் நடந்து விட்டது. சொந்த அக்காள் மகள் கமலாவை அவர் மணந்தார்.!

பெரியவர்களால் முடிவு செய்யப்பட்ட இத்திருமணம், சுவாமிமலையில் 1952 மே 1-ந் தேதி நடைபெற்றது.
காலிங்கராயர் குல மகள் ராஜாமணி அம்மையார் விருப்பப்படி ஆறுபடைவீட்டில் ஒன்றான சுவாமி மலை முருகப் பெருமானின் சந்நிதியில் சீர்திருத்த முறைப்படி எளிமையாக இத்திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு மு.கருணாநிதி, எம்.ஜி. ஆர்., நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பெருமாள் முதலியார், கவிஞர் கண்ணதாசன், அரங்கண்ணல், டி.ஏ. மதுரம், எஸ்.வி. சகஸ்ரநாமம், டைரக்டர்கள் கிருஷ்ணன் ஆகியோர் வந்து ஆசி செய்தனர்.

திருச்சியில் தமிழாசிரியராக இருந்த ரத்தினம் பிள்ளை, திருக்குறளைப்படித்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

கண்ணதாசன் மாலையை எடுத்துக் கொடுக்க அதை மணமகளுக்கு அணிவித்தார், சிவாஜி. பின்னர் தாலி கட்டினார்.

மணமக்களை கண்ணதாசன் வாழ்த்தி பேசினார். ஓட்டலில் இருந்து எடுத்து வந்த சாப்பாடு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

கல்யாணச் செலவு 500 ரூபாய்தான் என்று சிவாஜி கூறியுள்ளார். இப்படி தான் திருமணம் செய்து கொண்டதால் வருத்தப்பட்ட சிவாஜி தனது தம்பி சண்முகத்தின் திருமணத்திற்கு 100 புரோகிதர்களை வைத்து ஆச்சாரப்படி நடத்தினார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன் அக்கா மகள் கமலாவை திருமணம் செய்து கொண்டு *கடைசி வரை கருத்தொரு மிக்க கணவன் மனைவியாக வாழ்ந்தார்.

தினமும் படப்பிடிப்புக்கு செல்லுபோது கமலா அம்மாளை தன் முன்னால் வரச்சொல்லி அந்த மங்களகரமான முகத்தை பார்த்து விட்டுச் செல்வார்.

வீட்டில் இருந்தால் மூச்சுக்க முன்னூறு முறை கமலா கமலா… என்று தான் அழைப்பார்.
அவர், கமலா அம்மாளை திருமணம் செய்து கொண்டது 1952ம் ஆண்டு மே 1ந் தேதி.

பெரியவர்களாக பார்த்து முடிவு செய்த திருமணம்தான் ஆனாலும் சிவாஜியின் அக்கா கமலா பிறந்தபோது கமலா என் தம்பி கணேசனுக்குத்தான் என்று சொல்லியே வளர்த்தார்.

சூரக் கோட்டை அவர் மனைவி கமலம்மாவின் ஊர். சிவாஜிக்கு நடிப்பத்தவிர மற்ற எதுவும் தெரியாமல் இருந்தார். குடும்பத்தை அவர் மனைவி கமலாவும் தம்பி சண்முகமும் கவனித்துக் கொண்டனர். சிவாஜி அவர் மனைவியைச் சூரைக்கோட்டை ராணி என்றே அழைப்பதுண்டு.