கொரோனா தடுப்பூசியால் ஆண்மை குறைவு ஏற்படுகிறதா.? அமெரிக்க நிபுணர்கள் ஆராய்ந்து விளக்கம்

Keerthi
2 years ago
கொரோனா தடுப்பூசியால் ஆண்மை குறைவு ஏற்படுகிறதா.?  அமெரிக்க நிபுணர்கள் ஆராய்ந்து விளக்கம்

கொரோனா தடுப்பூசியால் பெண்கள் கர்ப்பம் தரிப்பதை குறைக்கிறதா என அமெரிக்க நிபுணர்கள் ஆராய்ந்து விளக்கம் அளித்துள்ளனர்.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியமாகியுள்ளது. ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என்று பல்வேறு வதந்திகள் தகவல்களாக வெளியாகி வருகின்றன.

அந்தவகையில் தடுப்புசி போட்டுக் கொள்வதால் பெண்களின் கருத்தரிப்பு குறைதல் மற்றும் ஆண்களின் கருவுறச் செய்யும் ஆற்றலை குறைக்கும் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் தகவல்களாக வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க நிபுணர் குழு ஒன்று ஆராய்ச்சி செய்ததில் தடுப்பூசி செலுத்தி கொள்வதால் பெண்களின் கருத்தரிப்பு மற்றும் ஆண்களின் கருவுறச் செய்யும் ஆற்றலை குறைக்கும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் ஆண்களின் கருவுறச் செய்யும் ஆற்றல் சற்று குறைகிறது என்றும் இந்த பிரச்சனை தற்காலிகமானது என்றும் தெரிவித்துள்ளது.