அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 09.02.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 09.02.2022

மேஷம்: 
அசுவினி: மற்றவர்கள் பாராட்டும்படியான செயல்களை செய்வீர்கள்.
பரணி: நீங்கள் நெகிழ்ச்சி அடையும்படியான நிகழ்ச்சி ஒன்று நடைபெறும்.
கார்த்திகை 1: சுபநிகழ்ச்சிகளில் சந்தோஷமாக கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: குறிக்கோள் ஒன்றை தீர்மானித்து அதை நோக்கி முன்னேறுவீர்கள்.
ரோகிணி: உங்களை ஆதரிக்க மாட்டார் என்று நினைத்தவரின் அன்பு கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: விலை உயரந்த பொருளை கவனமாக கையாளுங்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: சொந்த பந்தங்களிடம் இருந்து அன்பளிப்பு கிடைக்கும்.
திருவாதிரை: புதிய மின்னணு சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் மீது பிறர் கொள்ளும் பொறாமை சங்கடம் தரும்.

கடகம்: 
புனர்பூசம் 4: புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் பிறக்கும்.
பூசம்: உங்கள் பிரியத்துக்குரியவர் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்.
ஆயில்யம்: திட்டமிட்டு செய்த யுக்திகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

சிம்மம்: 
மகம்: தடைப்பட்ட பணி இன்று தொடரும். புதிய வழியில் வருமானம் வரும்.
பூரம்: பணியாளர்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
உத்திரம் 1: அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். பயம் தீரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள்.
அஸ்தம்: அதிகாரப் பதவியில் உள்ளோரிடம் இருந்து நல்ல செய்தி வரும்.
சித்திரை 1,2: தேவையின்றி கடன் வாங்குவதைத் தவிர்க்கப்பாருங்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: பிறரிடம் அளவாகப் பழகுங்கள். எதிர்பாராத நன்மை ஒன்று வரும்.
சுவாதி: பணியிடத்தில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டி வரும். நிதிநிலை சிறக்கும்.
விசாகம் 1,2,3: செலவுக்கேற்ப வரவு வரும். பழைய நட்பால் நன்மை ஏற்படும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: நண்பர்களுக்கு அதிக இடம் கொடுக்க வேண்டாம்.
அனுஷம்: உங்களுக்கு புரியாதிருந்த நுணுக்கங்கள் இன்று தெரிய வரும்.
கேட்டை: உங்களின் உழைப்புக்கு அதிகப் பலன் கிடைத்து வியப்பீர்கள்.

தனுசு: 
மூலம்: சமீபத்தில் நட்பான நபர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.
பூராடம்: பொறாமைக்காரர்களால் ஏற்பட்ட தொல்லைகள் தீரும்.
உத்திராடம் 1: லாபம் நிதானப்போக்கில் வரும். பேச்சில் கவனம் தேவை.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: ஒப்பந்தம் ஒன்றின் மூலம் நன்மை அடைவீர்கள்.
திருவோணம்: பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட நடவடிக்கை எடுப்பீர்கள்.
அவிட்டம் 1,2: நட்பு வட்டம் விரிவடையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பணியாளர்கள் கூடுதலாக உழைத்து நன்மை காண்பார்கள்.
சதயம்: சட்டதிட்டத்தை மீற வேண்டாம். குடும்பத்தினருடன் புரிதல் ஏற்படும்.
பூரட்டாதி 1,2,3: குழந்தைகளின் நடவடிக்கை பெருமிதம் அளிக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: இன்று பணியிடத்தில் கவனமாக செயல்படுவீர்கள்.
உத்திரட்டாதி: உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நிம்மதி வரும்.
ரேவதி: அலுவலக பணிகளை விரைந்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.