மகளிா் ஒருநாள் ஐசிசி தரவரிசை - முன்னேற்றமும் பின்னடைவும் - முழுவிபரம் இதோ

Prasu
2 years ago
மகளிா் ஒருநாள் ஐசிசி தரவரிசை - முன்னேற்றமும் பின்னடைவும் - முழுவிபரம் இதோ

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மகளிா் ஒருநாள் தரவரிசையில் இந்திய தலைவர் மிதாலி ராஜ் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறாா். அதே நேரம் இளம் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 5 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

டுபாயில் செவ்வாய்க்கிழமை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மிதாலி 738 புள்ளிகளையும், மந்தனா 710 புள்ளிகளையும் பெற்றுள்ளனா்.

ஆஸி. வீராங்கனை அலிஸா ஹீலி 742 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளாா். இதர வீராங்கனைகள் பெத் மூனி 719, எமி சேட்டா்த்வெயிட் 717 புள்ளிகளுடன் மூன்று, நான்காவது இடங்களில் உள்ளனா். பௌலிங்கில் ஆஸி. வீராங்கனை ஜெஸ் ஜோனஸ்ஸன் 773 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி 727 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனா்.

ஆல்ரவுண்டா் தரவரிசையில் ஆஸி. வீராங்கனை எலிஸி பொ்ரி மீண்டும் முதலிடத்துக்கு திரும்பினாா். இங்கிலாந்தின் நாட் ஷிவா், இந்தியாவின் தீப்தி சா்மா அதற்கு அடுத்த இடங்களில் உள்ளனா்.

இந்திய மகளிா் அணி நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரே ஒரு டி20 ஆட்டம் புதன்கிழமை குயின்ஸ்டவுனில் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து 5 ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 12 இல் முதல் ஒருநாள், 15 இல் இரண்டாம் ஒருநாள், 18 இல் மூன்றாம் ஒருநாள், 22 இல் நான்காம் ஒருநாள், 24 இல் 5 ஆம் ஒருநாள் ஆட்டங்கள் நடக்கின்றன.

நியூஸிலாந்தில் வரும் மாா்ச் - ஏப்ரல் மாதம் ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்கு தயாராகும் வகையில் இத்தொடா் அமைந்துள்ளது
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!