மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் ஆமைக் குட்டியின் தோற்றத்தில் பிறந்த குழந்தை

Keerthi
2 years ago
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் ஆமைக் குட்டியின் தோற்றத்தில் பிறந்த குழந்தை

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் ஆமைக்குட்டியின்  தோற்றத்தில் குழந்தையொன்று பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடாலியா – மார்ட்டின்  என்ற தம்பதிக்கே எலிசபெத் என அழைக்கப்படும் குறித்த குழந்தை பிறந்துள்ளது.

இக் குழந்தையானது‘ Harlequin ichthyosis‘  எனப்படும் அரிதான மரபணு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமையினால் ஆமை ஓட்டின் தடிப்பினைப் ஒத்த தோலைக்  கொண்டு இக் குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனால் அக்குழந்தையினால் சுவாசிக்கமுடியாமல் போகவே உடனடியாக அறுவை சிகிச்சை செய்து முகம் மற்றும் உடல் பகுதியில் இருந்தகனமான தோலினை மருத்துவர்கள் அகற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எலிசபெத்தின் தாய் நடாலியா கூறுகையில் ”அவள் பிறந்தவுடன் தீவிர சிகிசிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டாள். ஆரம்பத்தில் அவள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என மருத்துவர்கள் கூறினார்கள். எனினும் அதிர்ஷ்டவசமாக அவள் பிழைத்துக்கொண்டாள்.

கடினமான தோலுடன் ஒரு குட்டி ஆமைபோல அவள் எனக்குக் கிடைத்தாள். மருத்துவதொழில்நுட்பத்தின் மகத்தான  சாதனையினால் என்னுடைய மகள் இன்று உயிருடன் இருக்கிறாள்” என்றார்.

இந்நிலையில் குறித்த குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.