அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 10.02.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 10.02.2022

மேஷம்: 
அசுவினி: தவறு செய்வோருக்கு எதிராக குரல் உயர்த்துவீர்கள்.
பரணி: இன்று நல்ல செய்தி ஒன்று வரும். உங்களின் புகழ் கூடும்.
கார்த்திகை 1: உங்களது உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காத நிலை மாறும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: ஆரோக்யத்தில் அக்கறை எடுப்பீர்கள். சுறுசுறுப்பான நாள்.
ரோகிணி: பணியிடத்தில் கண்டிப்புக் கலந்த நடவடிக்கை எடுப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: பொறுமையுடன் முன்னேறுவீர்கள். குழப்பங்கள் தீரும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: எண்ணம் நிறைவேறும். பயங்கள் காணாமல் போகும்.
திருவாதிரை: புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களது கனவு நனவாகும்.
புனர்பூசம் 1,2,3: உங்களது எண்ணம் நிறைவேற பெரியோர் மூலம் வாய்ப்பு வரும்.

கடகம்: 
புனர்பூசம் 4: எதிலும் அவசரம் வேண்டாம். தந்தைக்கு நன்மை செய்வீர்கள்.
பூசம்: நியாயமான முயற்சியின் மூலம் நன்மை அடைவீர்கள்.
ஆயில்யம்: வாழ்க்கைத்துணை செய்யும் நல்ல செயல்களுக்கு துணை நிற்பீர்கள்.

சிம்மம்: 
மகம்: கற்பனை பயங்கள் முடிவுக்கு வரும். அதிர்ஷ்டமான நாள்.
பூரம்: மற்றவர் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும்.
உத்திரம் 1: உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். கடன் அனுமதி கிடைக்கும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். உங்களின் செல்வாக்கு கூடும்.
அஸ்தம்: விமர்சனங்களை ஒதுக்கித் தள்ளுங்கள். பரபரப்பான நாள்.
சித்திரை 1,2: யார் மீதும் தவறான பழியை சுமத்த வேண்டாம்.

துலாம்: 
சித்திரை 3,4: விருந்தில் பங்கேற்பீர்கள். எதிர்பார்த்த நன்மை தேடிவரும்.
சுவாதி: பேச்சிலும் செயலிலும் கவனமாக இருந்தால் இனிய நாள்.
விசாகம் 1,2,3: குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். உறவினர் உங்களை தேடி வரக்கூடும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: உங்களுக்கு நன்மை தரக்கூடிய மாற்றங்கள் உருவாகும்.
அனுஷம்: புதிய விஷயங்களில் ஈடுபடும் முன் அதிக கவனம் தேவை.
கேட்டை: இன்று எதிலும் கவனமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

தனுசு: 
மூலம்: மன நிம்மதி ஏற்படும். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.
பூராடம்: எதிர்பாராத நன்மைகள் விளையும். வியாபாரத்தில் குறைந்த லாபம் வரும்.
உத்திராடம் 1: வீட்டைப் புதுப்பிப்பதை சற்று தள்ளிப்போடுவீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: உற்சாகமான நாள். எதிர்பாராத லாபம் வரும்.
திருவோணம்: வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சீராக இருக்கும்.
அவிட்டம் 1,2: எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி ஒன்று வரும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பகை நீங்கும். எதிர்பாலினத்தினர் மூலம் நன்மை வரும்.
சதயம்: கடுமையான முயற்சியால் நினைத்த நன்மையை அடைவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: எப்போதோ முயன்ற விஷயத்துக்கு இன்று பலன் உண்டு.

மீனம்: 
பூரட்டாதி 4: பணியில் கவனத்துடன் இருங்கள். வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.
உத்திரட்டாதி: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்
ரேவதி: சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உங்களின் அந்தஸ்து உயரும்.