அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 11.02.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 11.02.2022

மேஷம்: 
அசுவினி: யாரிடமும் அளவுக்கு அதிக நட்பைத் தவிர்க்க வேண்டும்.
பரணி: நண்பர்களைத் தொடர்பு கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
கார்த்திகை 1: நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கூடுதலாக உழைத்து பலன் பெறுவீர்கள்.
ரோகிணி: கவலை தீரும். குழந்தைகளால் சிறு பெருமிதம் ஏற்படும்.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தினருடன் அனுசரித்து சென்று நன்மை காண்பீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: சக பணியாளர்களால் தற்காலிகப் பிரச்னை ஒன்று ஏற்படும்.
திருவாதிரை: வரவு சுமாராக இருந்தாலும் முன்பைவிட நன்றாயிருக்கும்.
புனர்பூசம் 1,2,3: திடீர் நட்பு உருவாகலாம். வேலைப்பளு அதிகரிக்கும்.

கடகம்: 
புனர்பூசம் 4: பணத்தை கவனமாக கையாளுவதால் பிரச்னை இருக்காது.
பூசம்: நண்பர்கள் இடையே கொடுக்கல் வாங்கலைத் தவிர்ப்பது நல்லது.
ஆயில்யம்: எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். பேச்சினால் நன்மை உண்டாகும்.

சிம்மம்: 
மகம்: நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.
பூரம்: மனதை அரித்துக்கொண்டிருந்த கவலை ஒன்று முடிவுக்கு வரும்.
உத்திரம் 1: வருமானம் கூடும். பழைய பிரச்னை ஒன்று தீரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: குடும்பத்தில் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்த்துவிடவும்.
அஸ்தம்: பயணத்தை ஒத்திப்போடுவது நல்லது. மூத்தோர் உதவி செய்வர்.
சித்திரை 1,2: முக்கியப் பொருட்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.

துலாம்
சித்திரை 3,4: கூடுதலாக உழைத்து உயரதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள்.
சுவாதி: தந்தைக்கு நன்மை ஏற்படும். எதிர்பாராத லாபம் உண்டு.
விசாகம் 1,2,3: குடும்பத்தில் சிறு சங்கடம் உண்டு. பாதிப்பு இருக்காது

விருச்சிகம்: 
விசாகம் 4: .சுற்றியிருப்பவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
அனுஷம்: யாருடனும் வம்பு வேண்டாம். கடன் தருவதை தவிர்த்துவிடுங்கள்.
கேட்டை: உங்களின் நலம் நாடும் ஒருவர் பயனுள்ள ஆலோசனை தருவார்.

தனுசு: 
மூலம்: எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள்.
பூராடம்: மனதில் தேவையற்ற கற்பனை பயங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.
உத்திராடம் 1: நிதானமும் பொறுமையும் இருந்தால் வெல்வீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: நல்ல செய்தி வரும். நேர்மறை சிந்தனை அதிகரிக்கும்.
திருவோணம்: கவலைகள் தீரும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
அவிட்டம் 1,2: குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். வீடு களைகட்டும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: எதிர்பாராத பணவரவு உண்டாகும். பணியில் கவனம் தேவை.
சதயம்: உங்களுக்கு நன்மைகள் கிடைப்பதை யாரும் தடுக்க முடியாது.
பூரட்டாதி 1,2,3: பணியாளர்கள் இன்று சிறிதளவு கவலைப்பட நேரிடலாம்.

மீனம்
பூரட்டாதி 4: உடல்நிலை பாதிப்புகள் வராமல் காத்துக்கொள்ளுங்கள்.
உத்திரட்டாதி: ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
ரேவதி: நண்பர் ஒருவரால் நலம் அளிக்கும் விஷயம் நடைபெறும்.