இன்றைய வேத வசனம் 11.02.2022: சீர்திருத்த கிறிஸ்தவம் எங்கிருந்து தொடங்கியது

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 11.02.2022: சீர்திருத்த கிறிஸ்தவம் எங்கிருந்து தொடங்கியது

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

இன்று நாம் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தில் இருக்கிறோம். இந்த சீர்திருத்த கிறிஸ்தவம் எங்கிருந்து தொடங்கியது தெரியுமா!

அக்டோபர் 1517ல் விட்டன்பர்க் ஆலயத்தில் மார்ட்டின் லூதரால் தொடங்கப்பட்டது. இன்று சீர்திருத்த திருச்சபைகள் உலக நாடுகளில் பெருகியிருக்கிறது.

அதேபோன்ற ஒரு சீர்திருத்தம் நமது சபைகளுக்கு மீண்டும் வேண்டியதாயிருக்கிறது! நான் இன்று உங்களுடைய ஒரு சத்தியத்தை பேச விரும்புகிறேன்!

இன்று சபையை மெல்ல கொல்லக்கூடிய ஒரு காரியம் ஆவிக்குரிய போர்வையில் இருக்கிறது. அதுதான் தசமபாகம் என்ற காரியம்.

இது ஒரு மெல்ல கொல்லக்கூடிய விஷம்! ஏன் அதை மெல்ல கொல்லக்கூடிய விஷம் என்று சொல்கிறேன் என்றால்,ஆண்டவருக்கு ஆராதனை செய்வதற்காக, ஆபேல் முதன்மையானதையும் சிறந்ததையும் ஆண்டவருக்கு கொடுத்தான்.

அதனாலயே ஆதி மிஷனரிகள் தேவனுக்கு முதன்மையானதையும், சிறந்ததையும் கொடுங்கள் என்று போதித்தனர்,

அதன்பிறகு ஆபிரகாம் தசமபாகம் கொடுத்தான். அப்பொழுது நியாயப்பிரமாணம் கிடையாது, தேவ வெளிப்படுத்தலின்படி கொடுத்தான்.

அடுத்தபடியாக மோசே, தேவன் எங்களிடம் கேட்பதை நாங்கள் காணிக்கையாக கொடுப்போம் என்று குறிப்பிடுகிறான்.

அதற்குப் பின்பாக நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. மோசை காலமுதல் இயேசுவின் காலம் வரைக்கும் தசமபாகம கொடுக்கப்பட்டது.

இயேசுகிறிஸ்துவிற்கு பின்பு நியாயப்பிரமாணம் முடிவடைந்துவிட்டது. அதன் பின்பு பெந்தேகோஸ்தே நாள் வந்தது. அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்திற்கு பின்பு தசமபாகம் என்ற ஒரு காரியம் வேதாகமத்தில் வேறு எங்கும் வரவில்லை!

ஆனால் புதிய உடன்படிக்கையில் தேவனுக்கு கொடுப்பது எப்படி? அவர் விரும்புவதை கொடுக்க வேண்டும்! அவர் கேட்பதை கொடுக்க வேண்டும். 

அதற்கு நாம் தேவனிடத்தில் தொடர்பில் இருக்க வேண்டும் எப்பொழுது ஜெபத்தில் உறுதியாக தரித்திருக்க இருக்க வேண்டும்.

நம் தேவனுக்கு கணக்குப் பார்த்துக் பத்தில் ஒன்று கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர் கேட்பதை கொடுக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.

அவர் திக்கற்றவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கு உதவ சொன்னால் மிகவும் தாராளமாக உதவுங்கள்!
அவர் பசியுடன் இருப்பவர்களுக்கு உணவளிக்க சொன்னால் உணவளியுங்கள்.

வறுமையின் காரணமாக படிப்பை தொடர முடியாத குழந்தைகளுக்கு உதவி செய்ய சொன்னால் மகிழ்ச்சியுடன் செய்யுங்கள்.

அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள். ஆமென்.

மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 25:40)
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். (கொரிந்தியர் 9:7)