அழிந்துபோன 25 உயிரினங்களின் பட்டியல்..வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்..!!

Keerthi
2 years ago
அழிந்துபோன 25 உயிரினங்களின் பட்டியல்..வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்..!!

உலகில் அழிந்து போன நிலையில் அதிகம் தேடப்படும் 25 உயிரனங்களின் பட்டியலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

டெக்சாசை தளமாகக் கொண்டுள்ள Re:Wild என்ற அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அதிகம் தேடப்படும் உயினங்களின் பட்டியலை தயார் செய்துள்ளனர். பிளாங்கோ பிளைன்ட் எனப்படும் இதில் கண்கள் அற்ற சாலமன் மீன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வகை மீன்கள் கடந்த 1951 ம் ஆண்டிற்குப் பின்னர் மிகவும் அரிதாகவே தென்பட்டது எனவும் நீரில் வெகு ஆழத்தில் பிளைன்ட் சாலமன்கள் வாழ்வதால் அவற்றுக்கு கண்கள் இல்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதைப் போல் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த நடமாடும் சிலந்தி பூச்சியும் , கொலம்பியாவின் பூனை மீன்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறி உள்ளனர்.