உலகம் முழுவதும் தற்போது கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டுவிட்டர் மற்றும் யூடியூப் பக்கங்கள் முடக்கம் பயனாளர்கள் அவதி...!

Keerthi
2 years ago
 உலகம் முழுவதும் தற்போது கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டுவிட்டர் மற்றும் யூடியூப் பக்கங்கள் முடக்கம் பயனாளர்கள் அவதி...!

டுவிட்டர் மற்றும் யூடியூப் சமூகவலைதளங்களில் முன்னோடியாக உள்ளது. இந்த இணையதள பக்கங்களை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போது கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டுவிட்டர் மற்றும் யூடியூப் பக்கங்கள் முடங்கின. இதனால், டுவிட்டர் மற்றும் யூடியூபை பயன்படுத்தமுடியாமல் பயனாளர்கள் அவதியடைந்தனர். இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மெக்சிகோ, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் டுவிட்டர், யூடியூப் சேவை முடங்கியது. 

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய டுவிட்டர், யூடியூப் பக்கங்கள் தற்போது செயல்பட்டிற்கு வந்துள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும், தற்போது நிலைமை சீரடைந்துவிட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்த தொழில்நுட்ப கோளாறுக்கு டுவிட்டர் நிறுவனம் பயனாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.