அனைவரும் விரும்பக்கூடிய சுவைமிக்க, மொறுமொறுப்பான சிக்கன் 65 சமைத்துப்பாருங்கள்...
#Cooking
#Chicken
#Fry
Mugunthan Mugunthan
2 years ago
தேவையானவை :
- எலும்பு நீக்கிய கறி - 250 கிராம் (தேவையான அளவு)
- உப்பு - தேவையான அளவு
- காஷ்மீரி தூள் - 1 டீஸ்பூன்
- மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது (Paste) - 2 டீஸ்பூன்
- சோள மாவு (Corn Flour) - 2 டீஸ்பூன்
- அரிசி மாவு (Rice Flour) - 1 டீஸ்பூன்
- லெமன் ஜூஸ் - 2 டீஸ்பூன்
- முட்டை -1
- எண்ணெய் - தேவையான அளவு
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
- பச்சைமிளகாய் - 2, 3 (கீறியது)
- சிவப்பு மிளகாய் - 2
- கருவேப்பிலை - 8-10
- Red Chilly Paste - 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
- முதலில் எலும்பு நீக்கிய கறியை 250 கிராம் (தேவையான அளவு) எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி அதனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- பின் அவற்றில் தேவையான அளவு உப்பு, 1 டீஸ்பூன் காஷ்மீரி தூள், 1 டீஸ்பூன் மல்லித்தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா, 2 டீஸ்பூன்,
- இஞ்சி பூண்டு விழுது, 2 டீஸ்பூன் சோள மாவு (Corn Flour), 1 டீஸ்பூன் அரிசி மாவு (Rice Flour), 2 டீஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக Mix செய்யவும்.
- பிறகு ஒரு முட்டையை எடுத்து ஒரு பௌலில் போட்டு நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
- கறியில் அந்த முட்டையை ஊற்றி நன்றாக Mix செய்யவும். மிக்ஸ் செய்ததை ஒரு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பிறகு ஊற வைத்த சிக்கனை ஒவ்வொன்றாக 2-3 நிமிடம் Medium Flame-ல் வைத்து சிக்கனை பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- பின் ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். அதில் 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும்.
- சீரகம் பொரிந்தவுடன் 1 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பிறகு அதில் 2-3 கீறிய பச்சை மிளகாய், 2 சிவப்பு மிளகாய், 8-10 கருவேப்பிலை, 1 டேபிள் ஸ்பூன் Red Chilly Paste சேர்த்து வதக்கி அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
- அதன் பிறகு பொரித்து வைத்த சிக்கனை வெந்து கொண்டிருக்கும் அந்த கிரேவியில் சேர்த்து டாஸ் பண்ண வேண்டும்.
- சிக்கன் அந்த கிரேவியில் சேரும் அளவிற்கு நன்றாக Mix செய்ய வேண்டும். ஆனால் அதிகமாக வேக வைக்க வேண்டாம்.
- சிக்கன் கிரேவியில் சேர்ந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது அனைவருக்கும் பிடித்த சூடான, மொறு மொறுப்பான சிக்கன் 65 தயார்.