அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 13.02.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 13.02.2022

மேஷம்: 
அசுவினி: உடல் நலம் சீராகும். மன அமைதி அதிகரிக்கும்.
பரணி: தன்னம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். வெற்றி கிடைக்கும்.
கார்த்திகை 1: உங்களின் மதிப்பு கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: பணியில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
ரோகிணி புது ஏஜென்சி எடுப்பீர்கள். பிரபலங்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
மிருகசீரிடம் 1,2: நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: பணியிடத்தில் நீங்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.
திருவாதிரை: உங்களின் பலம் எது, பலவீனம் எது என்று உணர்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பணியை நன்கு உணர்ந்து கொண்டு செயல்படுவது நல்லது.

கடகம்: 
புனர்பூசம் 4: உங்களுக்கு வேண்டிய பணத்தை நல்லோர் மூலம் பெறுவீர்கள்.
பூசம்: இன்று சிலவற்றை சிரமப்பட்டு சமாளிக்க வேண்டியிருக்கும்.
ஆயில்யம்: பணியாளர்களுக்கு ஓரளவு வேலைச்சுமை குறையும்.

சிம்மம்: 
மகம்: கம்பீரம் இழக்காமல் பணியிடத்தில் பொறுமையுடன் செயல்படுவீர்கள்.
பூரம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். சிறப்பான நாள்.
உத்திரம் 1: உங்களால் பிறர் ஆதாயம் அடைவர். கோபத்தை குறையுங்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: உங்கள் நிம்மதியை நிங்களே குறைத்துக் கொள்ள வேண்டாம்.
அஸ்தம்: மனநிறைவு வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
சித்திரை 1,2: மற்றவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: உங்களை கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவர்.
சுவாதி: வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும்.
விசாகம் 1,2,3: சவாலான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

விருச்சிகம் : 
விசாகம் 4: வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். மனதில் மகிழ்ச்சி தங்கும்.
அனுஷம்: புது வீடு மாறுவீர்கள். பணியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கேட்டை: உங்களது முயற்சிக்கு கைதட்டல் கிடைக்கும். செயலில் கவனம் தேவை.

தனுசு: 
மூலம்: சிலரது திருமணக் கனவுகள் நனவாகலாம். புதிய விஷயத்தை கற்பீர்கள்.
பூராடம்: நட்பால் நன்மை கிட்டும். இன்று மறக்க முடியாத சம்பவம் நடைபெறும்.
உத்திராடம் 1: ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: விலகிச் சென்றவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம்.
திருவோணம்: தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். உங்களின் அந்தஸ்து உயரும்.
அவிட்டம் 1,2: புதிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

கும்பம்: 
அவிட்டம் 3,4: இத்தனை நாளாக கவலை கொடுத்து வந்த விஷயம் மாறும்.
சதயம்: பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்குவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: விலகியவர்களைச் சமாதானம் செய்யும் எண்ணம் வரும்.

மீனம்: 
பூரட்டாதி 4: பல காலம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்
உத்திரட்டாதி: சேமிப்பு சற்றே உயரும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும்.
ரேவதி: திட்டமிட்ட பயணத்தில் மாற்றம் செய்வீர்கள். நன்மை நிகழும்.