சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் மீது யானை தாக்குதல்களை தடுக்க புதிய திட்டம்

Prathees
2 years ago
 சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் மீது  யானை தாக்குதல்களை தடுக்க புதிய திட்டம்

யால தேசிய விலங்குகள் சரணாலயத்திற்குள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவரும் வாகனங்கள் மீதான யானைகளின் தாக்குதலை தவிர்ப்பதற்காக, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடனான நடமாடும் வாகனங்கள் இரண்டு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதம்பிடித்துள்ள கெமுனு மற்றும் நந்திமித்ர ஆகிய யானைகள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவரும் வாகனங்களை தாக்கி வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இரு யானைகளும் உள்நாட்டு பயணிகள் சென்ற 2 வாகனங்களை தாக்கியுள்ளன.

அத்துடன் மற்றுமொரு வாகனத்தையும் இரு யானைகளும் தாக்கியிருந்தன.

இந்த நிலைமையை தவிர்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.