அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 14.02.2022

Prasu
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 14.02.2022

மேஷம்: 
அசுவினி: பலவகைகளில் வருமானம் வரும். பிறருக்கு உதவுவீர்கள்.
பரணி: நியாயமான முறையில் சம்பாதிப்பீர்கள். பெரியோரின் ஆசி கிடைக்கும்.
கார்த்திகை 1: குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: எந்தவொரு பிரச்னையும் வந்தவேகத்தில் காணாமல் போகும்.
ரோகிணி: வாழ்க்கைத்துணைக்கு பதவி, சம்பள உயர்வு கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: சிலருக்கு அரசாங்கப் பணி கிடைக்கும். பணம் புழங்கும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: கலைத்துறையில் ஈடுபாடு அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.
திருவாதிரை: அரசுப்பணியாளர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும்.
புனர்பூசம் 1,2,3: சுபநிகழ்ச்சி பற்றிய எண்ணங்கள் நிறைவேறும்.

கடகம்: 
புனர்பூசம் 4: வெற்றி சற்றே எட்டிப்போகும். மனம் தளர வேண்டாம்.
பூசம்: பணியாளர்களின் முயற்சி வெற்றி அளிக்கும். மகிழ்ச்சி கூடும்.
ஆயில்யம்: பயணங்கள் திட்டமிட்டபடி முடிவதில் தடை இருக்கலாம்.

சிம்மம்: 
மகம்: முயற்சியும், பயிற்சியும் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
பூரம்: வீட்டில் உள்ள மூத்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.
உத்திரம் 1: உங்களின் தொழில் ஆர்வம் வெற்றியை தேடி தரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: பொருளாதார உயர்வு ஏற்படப் பாடுபட்டு வெல்வீர்கள்.
அஸ்தம்: மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
சித்திரை 1,2: புதிய வாகனம் வாங்குவீர்கள். பணியாளர்களுக்கு ஓய்வு அதிகரிக்கும்.

துலாம்: 
சித்திரை 3,4: எதிர்பாராத நன்மை கிடைக்கும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
சுவாதி: கைதட்டல் கிடைக்கும். பணியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
விசாகம் 1,2,3: உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

விருச்சிகம்: 
விசாகம் 4: பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்த்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
அனுஷம்: சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். குழந்தைகளால் மகிழ்வீர்கள்.
கேட்டை: விருது உங்களைத் தேடி வரும். மிகுந்த முயற்சியால் லாபம் கூடும்.

தனுசு: 
மூலம்: பண விவரகாரங்களில் நிதானமும், பொறுமையும் தேவை.
பூராடம்: வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
உத்திராடம் 1: சம்பளம் உயரும். வியாபாரத்தில் லாபம் சுமாராக வரும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: சிறிய ஆரோக்கியப் பிரச்னை வந்து விலகும்.
திருவோணம்: தட்டிப் போய்க்கொண்டிருந்த விஷயம் இன்று இயல்பாய் முடியும்.
அவிட்டம் 1,2: வெளிநாட்டில் வாழும் குழந்தைகள் நன்மை அடைவர்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: அழகு சாதன பொருட்கள் வாங்குவீர்கள். கடன் தீரும்.
சதயம்: பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். மேடையில் பேசுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: உங்களின் கவர்ச்சி அம்சம் கூடும். சோம்பலை உதறுங்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: உங்களுக்கு பாராட்டும், கைதட்டலும் கிடைக்கும். நல்லதே நடக்கும்.
உத்திரட்டாதி: புதிய விஷயத்தை கற்பீர்கள். அன்பான சந்திப்பு நிகழும்.
ரேவதி: நீங்கள் மதிக்கும் ஒருவரால் சந்தோஷம் வரும். கலகலப்பான நாள்.